கர்ப்பகாலத்துக்கு ஏதுவான உடைகள்


கர்ப்பகாலத்தில் ஹார்மோன் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் மார்பு, வயிறு, விலா எலும்பு ஆகிய உடலுறுப்புகள் பெரிதாகும். கர்ப்பகால ஹார்மோன் சுரப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணம்-பிட்யூட்டரி சுரப்பி. இது ப்ரோ-லாக்டின் என்சைமை, 10 மடங்கு கூடுதலாக சுரக்க வைக்கும். இதன் முக்கிய பணி-கர்ப்பிணி பெண்ணுக்கான தாய்ப்பால் உற்பத்தியை தூண்டுவதுதான்.

பிட்யூட்டரி தவிர, கர்ப்பகாலத்தில் அதிகமாகும் பெண் ஹார்மோன் `ஈஸ்ட்ரோஜனும்', ப்ரோலாக்டின் உற்பத்தியை தூண்டிவிடும்.
இதனால் கர்ப்பிணிகளின் மார்பகத்தில் பால்சுரப்பிகள் உப்பி பெரிதாகி, குழந்தை பிறந்தவுடன் தரவேண்டிய தாய்ப்பால் உறுதிப்படும்.

கர்ப்ப காலத்தில் மார்பகம், வயிறு, கருப்பை மற்றும் விலா எலும்பின் அளவு அதிகரித்து, உடம்பு பெரிதாகும். எனவே கர்ப்ப காலத்தில் இறுக்கமான உடைகளை தவிர்ப்பது நல்லது. இது உடம்பை மேலும் அவஸ்தைக்குள்ளாக்கும். எனவே, தளர்வான ஆடை அணிவது நல்லது.

கர்ப்பகாலத்தில் நெஞ்செரிச்சல், அஜீரணம், உதரவிதானம் இறுக்கமடைதல்,விலா அகலப்படுதல் ஆகியவை காரணமாக, மார்பு மற்றும் முதுகு வலி ஏற்படும். எனவே கர்ப்பகாலத்தில் நெஞ்சுஎரிச்சல் தரும் உணவுகளை தவிர்க்கலாம்.

அதிகளவில் தண்ணீர் பருக வேண்டும். அது சீரான பிரசவத்திற்கு வழி வகுக்கும். பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு மார்பு இறுக்கம் இயல்பானதாக கருதப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் அவை கடுமையான பிரச்சனைகனை ஏற்படுத்தக்கூடும்.

மார்பு அழுத்தம் அதிகமாக இருந்தால் ஆஸ்துமா, மாரடைப்பு, ரத்தம் உறைதல் அல்லது ஏதேனும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது அவசியம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"