பேஸ்புக்கில் நடிகை அஞ்சு அரவிந்த் ஆபாசப் படங்கள்...!


மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள நடிகையான அஞ்சு அரவிந்த், ‘வேணல் கினாவுகல்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் பூவே உனக்காக, எனக்கு ஒரு மகன் பிறப்பான், ஒன்ஸ் மோர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது பெயரில் சமீபத்தில் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது.

அதில் அஞ்சு அரவிந்தின் ஆபாச படங்கள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து கொச்சி போலீஸ் கமிஷனரிடம் அஞ்சு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த அசீம் (33) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அஞ்சு அரவிந்தின் இ&மெயில் முகவரியை தெரிந்து கொண்ட அசீம் பலமுறை அவரை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்ய கோரியும் தகவல் அனுப்பியுள்ளார். இ&மெயில் மூலம் பலமுறை அவருக்கு அஞ்சு அரவிந்த் எச்சரிக்கை விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அசீம், அஞ்சு அரவிந்த் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி, அதில் மார்பிங் மூலம் நிர்வாண படங் களை வெளியிட்டதாக விசாரணையில் தெரிந்தது. போலீசார் அவரை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"