தவறுதலாக அப்பாவுக்கு ஆபாசப்படம் காட்டிய மகள் : அதிர்ச்சி சம்பவம்


பிரித்தானிய நடிகை அனா பிரெய்ல், தனது தந்தைக்கு தவறுதலாக ஆபாசப் படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியதால், பெரும் சங்கடத்திற்குள்ளாகி யுள்ளார். 36 வயதான அனாபிரெய்ல், சஞ்சிகையொன்றுக்கு அண்மையில் அளித்த செவ்வியொன்றில் இதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரிட்டனில் காலஞ்சென்ற, பிரபல பாலியல் சஞ்சிகை வெளியீட்டாளரான போல் பிராட்டிலியின் மனைவி ஜீன் ரேமன்ட்டின் பாத்திரத்தில் ஆனா பிரெய்ல் நடிக்கிறார். இந்நிலையில் தனது நடிப்புக்காக, ஜீன் ரேமன்ட் மற்றும் போல் பிராட்லி குறித்த தகவல்களை இணையத்தளங்களில் தேடிக்கொண்டிருந்த அனா, ஜீன் ரேமன்ட்டின் படமொன்றை தனது தந்தைக்கு மின்னஞ்சலில் அனுப்பத் தீர்மானித்தார். ஆனால், ஜீனின் படத்திற்கு பதிலாக ஆபாச படமொன்றை தந்தைக்கு அனுப்பியமை சற்று நேரத்தின் பின்னரே நடிகை அனாவுக்கு தெரியவந்ததாம்.

“எனது தந்தை என்னை தொலைபேசியில் அழைத்து, “நீ இவ்விடயத்தில் சற்று அளவுக்கதிகமாக செயற்பட்டுள்ளாய் என எண்ணுகிறேன்” என்றார். அவர் கூறுவதன் அர்த்தம் புரியாமல் நான் வியப்படைந்தேன். அதன் பின்னர் நான் ஜீன் ரேமன்ட்டின் படத்திற்கு பதிலாக உண்மையான பாலியல் படமொன்றை தந்தைக்கு அனுப்பிவிட்டதை உணர்ந்தேன். எனக்கு பெரும் அவமானமாகப் போய்விட்டது” என அனா பிரெய்ல் தெரிவித்துள்ளார்.

அனா பிரெய்லின் தந்தையான டெஸ்மன்ட் பிரெய்ல், முன்னாள் பிரெஞ்சு மொழிஆசிரியராவார் என்பதுடன், இணையத்தள வடிவமைப்பு நிறுவனமொன்றை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த அனா பிரெய்ல், 2008ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

கலைத்துறை பணிக்காக பிரிட்டனின் போல்டன் பல்கலைக்கழத்தில் கௌரவ பட்டம் பெற்ற அனா, 2001ஆம் ஆண்டு நடிகர் டேவட் தேவ்லிஸை திருமணம் செய்தார். 2010ஆம்ஆண்டு இவர்கள் பிரிந்தனர். இத்தம்பதிக்கு 7 வயதான ஒரு மகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"