நீங்கள் செக்ஸ் அடிமையா.. ஒரு சுய பரிசோதனை!


உலகம் முழுவதும் 72 சதவிகிதம் பேர் செக்ஸ் அடிமைகள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எதுவுமே சராசரியாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஓர் அளவிற்கு மேல் போய், சதா சர்வ காலமும் அதைப்பற்றிய நினைவாகவே இருப்பவர்கள்தான் அடிமைகளாக மாறுகின்றனர்.

மது, போதை, சிகரெட், இண்டர்நெட் பழக்கங்களுக்கு அடிமையானவர்களைப் போல செக்ஸ்சிற்கு அடிமையானவர்களுக்கு என்று சில சிகிச்சைகள் இருக்கின்றன. செக்ஸ் அடிமைகளை கண்டறிவது எப்படி? அதிலிருந்து மீள்வது எப்படி என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.

சிறு வயதில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களே பெரும்பாலும் அடிமைகளாக மாறுகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. மற்றவரிடம் சொல்ல பயந்து, அதைத் தனக் குள்ளேயே ரகசியமாகப் பாதுகாக்கிற பெண்கள், பின்னாளில் அதீத செக்ஸ் ஆர்வமுள்ளவர்களாக மாறுகிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

செக்ஸ் அடிமை எனில் எதிலும் ஒரு நிதானம் இருக்காது. குடும்பம், வேலை, குழந்தைகள், நட்பு என எல்லாவற்றிலும் விட்டேத்தியான ஒட்டு தலுடன் இருப்பார்கள். பொழுதுபோக்கு, போன்ற மிகப்பிடித்த பல விஷயங்களிலிருந்து கூட விலகியே இருப்பார்கள்.

அடிக்கடி படபடப்பு, சோர்வு, மன உளைச்சல், டென்ஷன், பொறுமையின்மை போன்றவை ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதீத செக்ஸ் ஆர்வமுள்ள பெண்கள் அதற்கு வடிகாலாகத் தேர்ந்தெடுக்கும் முதல் ஆயுதம் சுயஇன்பம். ஆபாசப் படங்களைப் பார்ப்பது, புகைப் படங்களை ரசிப்பது என ஆண்கள் நாடும் விஷயங்கள் இவர்களை ஈர்ப்பதில்லை. 60 சதவிகிதப் பெண்களுக்கு வாரத்துக்கு இரண்டு முதல் நான்கு முறை சுய இன்பம் காண்கிற பழக்கம் இருப்பதாகவும் மேற் சொன்ன ஆராய்ச்சி தெரிவிக்கிறது. சுய இன்பப் பழக்கம் அளவை மிஞ்சும் போது வேறு விதங்களில் தன் விளைவுகளைக் காட்டிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

செக்ஸ் அடிமைத்தனத்திற்கு மூல காரணமாக இருப்பது மனதுதான். எனவே முதலில் சிகிச்சை தர வேண்டியது மனதுக்கு. செக்ஸ் ஆர்வம் உங்களைக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்வதாக உணரும்போது யோகா, தியானம் முதலியவற்றில் ஈடுபடுங்கள். இந்த பயிற்சிகள் உங்களை மாற்றும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். ஜாகிங் இப்பிரச்சினைக்கான மிக அருமையான பயிற்சி என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.

செக்ஸ் எண்ணங்கள் மனதில் இருந்து வெளியேறும் வரை ஆண்-பெண் சந்திப்புகள் அதிகம் இருக்கிற இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள். இன்டர்நெட் உபயோகிக்கிற, பிரவுஸ் செய்கிற பழக்கமிருந்தால், தற்காலிகமாக நிறுத்துங்கள் அது உங்களுக்கு கூடுதல் நன்மையை தரும்.

முடிந்தவரை உங்களை பிஸியாக வைத்திருங்கள். மனசுக்கு வேலையில்லாமல் போகிற போதுதான் இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறது. செக்ஸ் ஆர்வம் தலைதூக்கும் போதும், சுய இன்பம் செய்ய நினைக்கிற போதும் சட்டென மனத்தை உங்களுக்குப் பிடித்த வேறு விஷயத்தில் திருப்புங்கள் இதன் மூலம் படிப்படியாக அடிமைத்தனத்தில் இருந்து மீளமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"