பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆண்மை நீக்கம் : கோர்ட் அதிரடி உத்தரவு


தென்கொரியாவில் 5 டீன் ஏஜ் சிறுமிகளை பலாத்காரம் செய்த ஆசாமிக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தென் கொரியாவை சேர்ந்தவர் பியோ (31). இவர் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் முதல் 2012 மே மாதத்துக்குள் 5 டீன் ஏஜ் சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

பலாத்காரம் செய்த காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார். அதை ஆன்லைனில் வெளியிடுவதாக கூறி டீன் ஏஜ் பெண்களை மிரட்டியே அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த விஷயம் வெளியில் கசிந்தவுடன் போலீசார் பியோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீதான வழக்கை, சியோல் மாவட்ட கோர்ட் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. பியோவின் அடக்க முடியாத பாலுணர்வை கட்டுப்படுத்த, அவருக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோர்ட் அதிரடி உத்தரவிட்டது.அத்துடன் 15 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

தென் கொரிய வரலாற்றில் பலாத்கார வழக்கில், ரசாயன முறையில் குற்றவாளிக்கு ஆண்மை நீக்கம் செய்ய கோர்ட் உத்தரவிட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"