நள்ளிரவு நிர்வாண பூஜை!


குழந்தை இல்லாத பெண்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரவு பூஜைகள் நடத்தப்படுகிறது. சாமியார், அவருடைய நம்பிக்கைக்குரிய உதவியாளர் மற்றும் அந்தப் பெண்... என மூவர் மட்டுமே இரவு பூஜையில் கலந்துகொள்ள முடியும்.

இரவு பூஜையில் பங்கேற்கும் பெண்ணின் மீது குளிர்ந்த நீரை குடம் குடமாக ஊற்றுகின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு ஆடையாக களைந்துவிட்டு, நிர்வாணமாக இருக்கும் பெண்ணின் மீது எண்ணெய், சந்தனம், விபூதி என்று பலவற்றை சாமியாரும் அவருடைய உதவியாளரும் பூசுவார்களாம். இப்படிச் செய்யும்போது உணர்ச்சியால் தூண்டப்படும் அந்தப் பெண்ணிடம் சாமியாரும் அவருடைய உதவியாளரும் தங்களின் காம இச்சையை தீர்த்துக்கொள்வதில் பெரிய சிக்கல் இருக்காதாம்.

கணவனுக்கு இருக்கும் பிரச்னையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள், சாமியாரிடம் அடிக்கடி வரும்பட்சத்தில் அவர்களுக்கு குழந்தையும் பிறந்துவிடுகிறது. அவர்கள் மூலம் சாமியாருக்கு விளம்பரமும் கிடைக்கிறது. யாராவது ஒரு பெண் இரவு பூஜையில் ஒத்துழைக்க மறுத்து பிரச்னை செய்யும்போதுதான், சாமியாரின் வேடம் வெளி உலகுக்குத் தெரிய வருகிறது.

பில்லி சூன்யம், ஏவல், பெண்களை வசியம் செய்வது என்று சொல்லப்படும் விஷயங்களில் துளியளவும் உண்மை இல்லை. ஆனால், திரைப்படங்கள், ஊடகங்கள் போன்றவை இவை உண்மை என்பதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை சமீப காலங்களில் அதிகமாக உண்டாக்குகின்றன. அதன் காரணமாக படித்தவர்கள், பணக்காரர்கள், தொழிலதிபர்கள் என்று மேல்தட்டு மக்களும் தொடர்ந்து ஏமாறுகின்றனர். பில்லி சூன்யம், ஏவல் வேலைகளைச் செய்யும் நபர்களில் குற்றப் பின்னணி கொண்ட கிரிமினல்கள்தான் 90 சதவிகிதம் பேர் இருப்பார்கள். அல்லது, வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள், உழைத்து வாழப்பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியவர்களாக இருப்பார்கள்.

அடிப்படையாக அவர்கள் சில விதிகளைப் பின்பற்றுகிறார்கள். பிளாக் மேஜிக் எனப்படும் கண்கட்டு வித்தைகளில் சிலவற்றை கற்றுக்கொள்கிறார்கள். எண்ணெய் சட்டியில் கையை விடுவது, வாயில் இருந்து லிங்கம் எடுப்பது, கைகளில் விபூதி வரவழைப்பது என்று சில வித்தைகளைப் பயன்படுத்தி தாங்கள் கடவுளின் சக்திபெற்றவர்கள் என்ற எண்ணத்தை அப்பாவி மக்களிடம் விதைக்கின்றனர். அதை நம்பி பிரமித்துப்போகும் மக்கள், அந்தச் சாமியாரிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடுகிறார்கள். பிறகு, அந்தச் சாமியார் சொல்வதுதான் அவர்களுக்கு வேதவாக்கு. அப்படி ஆன பின்புதான், அவர்களை நம்பி சொத்துக்களை ஒப்படைப்பது, பெற்ற குழந்தையை நரபலி கொடுத்து புதையலைத் தேடுவது, குழந்தை பிறக்காத பெண்கள் ராத்திரி பூஜைக்குப்போவது என்று பல பைத்தியக்காரத்தனங்களை செய்கின்றனர்.

இந்தச் சாமியார்கள் செய்யும் கண்கட்டு வித்தைகளை, உரிய பயிற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதை பகுத்தறிவு இயக்கங்கள் அறிவியல் பூர்வமாக பலமுறை நிரூபித்துள்ளன. ஒரு தேர்ந்த மேஜிக் நிபுணன், இந்த சாமியார்கள் செய்வதைக் காட்டிலும் பல அற்புதங்களைச் செய்கிறான். அவர்கள் அதை மேஜிக்காகவே செய்கிறார்கள். சாமியார்கள் தங்களின் சக்தியால் செய்கிறோம் என்று ஏமாற்றுகிறார்கள்.

ஆண்,பெண் வசியம் என்று கேட்டு வருபவர்களிடம், சில போதை வஸ்துகளை பிரசாதத்திலோ தீர்த்தத்திலோ கலந்து கொடுப்பார்கள். இதற்காக சில மூலிகைகளையும் பயன்படுத்துவார்கள். போதை வஸ்து தன்னுடைய வேலையை காட்டும்போது, சில நாட்களுக்கு மருந்து கொடுத்தவர் சொல்வதைக் கேட்பார். அல்லது பேயறைந்தவர் போல் திரிவார். அந்த சமயத்தைப் பயன்படுத்தி நாம் சில காரியங்களை சாதித்துக்கொள்ளலாம். ஆனால், நிரந்தரமாக யாரையும் மயக்கத்தில் வைத்திருக்க முடியாது. இதுதான் ஆண், பெண் வசியம்.

உண்மையான ஆன்மிக நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைகளுக்கும்¢ நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆன்மிகம் என்ற பெயரில், மனித மனத்தின் பலவீனங்களைக் குறிவைத்து தாக்கி பலனடையும் போலி சாமியார்களுக்கு தமிழகத்தில் எப்போது தடை விதிக்கப்படும்?

நன்றி : ஜோ.ஸ்டாலின்-விகடன்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"