ஆபாச படத்தை வகுப்பறையில் ஒளிபரப்பு செய்த ஆசிரியை..


இத்தாலியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுக்கு பாப் ஸ்டார் ஒருவரின் பாடல்கள் அடங்கிய வீடியோவை வகுப்பறையில் ஒளிபரப்பியபோது அதில் ஆபாச படம் இருந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

வடக்கு இத்தாலியில் உள்ள Vicenza என்ற பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியை தனது மாணவர்களுக்கு பிரிட்டன் பாப் ஸ்டார் Duran Duran அவர்கள் குறித்த ஒரு பாடத்தை நடத்தினார். மறுநாள் அவருடைய பாடல்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வகுப்பறையில் ஒளிபரப்புவதாக கூறினார்.

மறுநாள் கடையில் இருந்து ஒரு சிடி வாங்கி வந்து வகுப்பறையில் அதை ஒளிபரப்பியபோது கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அதில் ஆறு ஆண்கள் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் ஆபாசப்படம் ஓடியது. உடனே அதிர்ச்சி அடைந்த ஆசிரியை வீடியோவை நிறுத்திவிட்டார்.

இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு மறுநாள் மாணவர்களின் பெற்றோர்களால் தெரிந்து, அவரிடம் விசாரணை செய்யப்பட்டது. வரும் காலத்தில் மாணவர்களுக்கு வீடியோவை ஒளிபரப்புவதற்கு முன் சோதனை செய்யவேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிடி விற்ற கடையின் மீது போலீஸ் புகார் கொடுக்கவும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"