பெண்ணுறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண்


இங்கிலாந்தில் உள்ள இளம்பெண் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல் பிறந்து வளர்ந்து வருவதை தற்போது தான் மருத்துவர்கள் தற்செயலாக கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் Jacqui Beck என்பவர் சென்ற வாரம் முதுகுவலியால் அவதிப்படுவதாக ஒரு பிரபல மருத்துவமனைக்கு வந்தார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பெண்ணுறுப்பே இல்லாமல் இதுவரை வாழ்ந்து வந்துள்ளதை கண்டுபிடித்தனர். இந்த குறை இருப்பதை அவர் முன்பே அறிந்திருந்தாலும், அவர் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளதும், தற்போது தெரியவந்துள்ளது.

சாதாரண பெண்களுக்கு இருக்கும் பெண்ணுறுப்பு எனப்படும் vagina, கர்ப்பப்பை மற்றும் cervix or vaginal opening. எனப்படும் உறுப்பு ஆகியவை இந்த பெண்ணுக்கு இல்லை.

இவரால் மற்ற பெண்களைப்போல செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளவோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாது. இதுபோன்ற குறைபாடுகளுடன் பெண்கள் பிறப்பதும் மிக அரிதினும் அரிது என இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவர் வெளித் தோற்றத்தில் பார்ப்பதற்கு மற்ற சாதாரண பெண்களை போலவே இருப்பார்.இவருக்கு இருக்கும் குறைபாட்டை அவரே சொல்லாமல் யாரும் அறியமுடியாது.

இவருக்கு இருக்கும் இந்த குறைபாட்டை இதுவரை இவருடைய பெற்றோர்களும் ஏன் மறைத்தார்கள். இதற்கு மருத்துவ சிகிச்சையை ஏன் மேற்கொள்ளவில்லை என்ற விபரங்கள் தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவருக்கு தகுந்த அறுவை சிகிச்சை செய்து செக்ஸ் உறவுக்கு தகுதி பெற செய்ய மருத்துவத்தில் வாய்ப்பு உள்ளது என்றும் இதுகுறித்து இவருடைய பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்…!
பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"