தமிழர்களின் திருமண சடங்கு ரகசியங்கள்!!திரு என்பது தெய்வத்தன்மை எனவும் மணம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு திருமணம் என்றால் மேன்மையுடன் கூடிய தெய்வகடாட்சம் பொருந்திய இணைதல் எனக் கொள்ளப்படுகின்றது.தமிழர்களின் இந்துத் திருமணங்களில் ஆகம மரபுச் சடங்குகளுடன் பல சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுவது வழக்க மாகும். அதுமாத்திரமல்லாமல் இந்துத் திருமணச் சடங்குக்கு முன்னரும் பின்னரும் பல சடங்குகள் நடத்தப்படுவது தமிழர்களின் மரபாகும்.

தமிழர்தம் பண்பாட்டில் திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிராகும். அந்தத்திருமணத்தின் பாரம்பரிய அடையாளமாகத்திகழும் தாலியை செய்வதற்கு பயன்படுத்தப்படும் தங்க நாணயத்தை உருக்குவதற்குரிய சுபநாளாக பொன்னுருக்கல் கருதப்படுகிறது.

தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

பொன்னுருக்கல்
நிகழ்வில் தெரிந்தோ தெரியாமலோ முள்முருங்கைக்கு முக்கியமான இடம் உள்ளது. இதற்கு இரண்டு விதமான காரணங்கள் பெரியோர்களால் முன்வைக்கப்படுகின்றன. நம் புராணங்களின்படி இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் உள்ளன. எனவே அந்த இந்திரனை திருணத்திற்கு சாட்சியாக கொள்ளும்போது ஆயிரம் கண்களுக்கு ஒப்பான முள் முருங்கையை பயன்படுத்துகிறார்கள் என்பது .

முள்முருங்கை என்பது காலநிலை மாற்றங்களுக்கு முகம் கொடுத்து செழித்து வளரக்கூடிய ஒருவகைத்தாவரம். எனவே திருமண பந்தத்தில் இணையும் கணவன், மனைவி ஆகிய இருவரின் வாழ்வும் முள்முருங்கை போல் செழித்து வளர்ச்சியடையும் என்பது நம்பிக்கை.

அம்மி மித்திப்பது

நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்.

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது
திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

வாழைமரம் கட்டுவதின் ரகசியம்

வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"