டியூசன் மாணவிகளை ஆபாச படமெடுத்த டீச்சரின் கணவர்!!

டியூசன் சென்ற மாணவிகளை ஆசிரியையின் கணவர் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகர் பொன்னியம்மன் ஆதிலட்சுமி தெருவை சேர்ந்தவர் சங்கர் (35). கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (30). பட்டதாரி.இவர், வீட்டில் இருந்தபடி டியூஷன் நடத்தி வருகிறார். இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் இவரிடம் டியூஷன் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை டியூஷன் படிக்க வந்த சகோதரிகளான 2 மாணவிகள் கழிப்பறை சென்றுள்ளனர். அங்கு ஒரு கைப்பேசி இருந்துள்ளது, அதை எடுத்து பார்த்தபோது வீடியோ ரிகார்டிங் செய்யப்பட்டு இருப்பதை பார்த்தனர்.உடனே அதை கொண்டு வந்து, ஆர்த்தியிடம் கொடுத்துள்ளனர். அதை பார்த்த ஆர்த்தி, அதில் இருந்த காட்சிகளை அழித்துவிட்டு பின்னர் இந்த கைப்பேசி என்னிடம் இருக்கட்டும் என கூறி, மாணவிகளை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

வீட்டுக்கு சென்ற மாணவிகள், டியூஷன் படிக்க சென்ற வீட்டின் கழிப்பறையில் கைப்பேசி இருந்ததையும், அந்த கைப்பேசியில் இருந்த காட்சிகளை ஆர்த்தி அழித்ததையும் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பீர்க்கன்காரணை பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அந்த கைப்பேசி சங்கருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

இதையடுத்து சங்கரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில், தினமும் மனைவி டியூஷன் நடத்தும்போது, கழிப்பறையில் வீடியோ ரிக்கார்டிங்கில் கைப்பேசியை சங்கர் வைத்துவிடுவார். மாணவிகள் வீட்டுக்கு சென்றவுடன், அதனை மடிக்கணனியில் பார்த்து ரசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.நேற்றும் இதுபோல் செய்துள்ளார்.இதையடுத்து சங்கரை கைது செய்த பொலிசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"