" போல்ட்" புதுமையான புகைப்படங்களால் ஆன சோஷியல் மீடியா அறிமுகம்


இன்றைய இளைய தலைமுறையின் கேள்வி. அவர்கள் வளவளவென்று எழுதுவதையோ பேசுவதையோ விரும்புவதில்லை. டக்கென்று ஒரு புகைப்படம் எடுக்கிறார்கள், அல்லது, ஒரு கார்ட்டூன் போஸ்டரைப் போடுகிறார்கள், அல்லது, கையால் படம் வரைந்து வெளியிடுகிறார்கள், அல்லது, ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள ஒரு நகைச்சுவைப் புகைப்படத்தை வெளியிட்டுவிடுகிறார்கள்.

ஒவ்வொருவரும் புகைப்படங்களைச் சரியாகப் பயன்படுத்தக்கூடிய அப்ளிகேஷன்களை வெளியிட்டு மக்களை ஈர்க்கும் யோசனையில் இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இளைஞர்கள் பேச நினைக்கிற எல்லாவற்றையும் புகைப்படங்களாலேயே பேசலாம். இது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆகியவற்றுக்கான அப்ளிகேஷனாக வெளியாகிறது. அதில் உள்ள புகைப்படங்கள் மற்றும் கேமெரா கொண்டு எடுக்கும் புதிய புகைப்படங்களைப் பயன்படுத்தி எல்லாருடனும் பேசலாம். நண்பர்கள் ஒருவரை ஒருவர் பின்தொடரலாம்.

ஒருவர் எடுக்கும் புகைப்படத்துக்கு மற்றவர் புகைப்படத்தாலேயே பதில் சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால், முற்றிலும் புகைப்படங்களால் ஆன ஒரு சோஷியல் மீடியா நெட்வொர்க்தான் இது.

போல்ட்டின் வருகையை இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். ஏற்கெனவே இந்தச் சேவை சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, நியூ சிலாந்து ஆகிய தேசங்களில் அறிமுகமாகியுள்ளது. அங்கெல்லாம் பெரும் எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இதில் இணைந்துள்ளார்கள்.

ஏற்கெனவே இவர்கள் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான புகைப்படங்களை போல்ட் வழியே பகிர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இவர்களைப் பார்த்து இன்னும் பல நண்பர்கள் இதில் நுழைகிறார்கள். போல்ட் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற தேசங்களில் இருந்து பல கோடி உறுப்பினர்கள் இதில் இணைவார்கள் என்று போல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மக்களும் மிகுந்த ஆவலுடன் போல்ட் வசதியைக் காண்பதற்குக் காத்திருக்கிறார்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"