இந்தியர்களின் விந்து எண்ணிக்கை குறையும் அதிர்ச்சி காரணம்


தந்தையாகும் தகுதி பெற ஒரு ஆணுக்கு ஸ்பெர்ம் கவுண்ட் 15 மில்லியன் என இருக்கவேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. ஆனால் பல இந்திய ஸ்பெர்ம் வங்கிகள் 20 மில்லியன் எனும் அளவை நிர்ணயித்துள்ளன.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியர்களின் ஸ்பெர்ம் கவுண்ட் 60 மில்லியன் எனும் அளவில் இருந்து 30 மில்லியன் எனும் அளவுக்கு குறைந்ததாக, அதாவது சரிபாதி விழுந்ததாக தெரிகிறது.

20 மில்லியனா, 15 மில்லியனா எனும் சர்ச்சை எழுந்ததால் உலக சுகாதார மையம் பல ஆய்வுகளை நிகழ்த்தி, 15 மில்லியன் கவுண்ட் இருந்தாலே தந்தையாக போதுமானது என அறிவித்து உள்ளது.

2008ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மணிபாலில் நிகழ்ந்த ஆய்வில் 7770 ஆண்களின் ஸ்பெர்ம் கவுண்ட் ஆராயபட்டது. இவர்கள் 1993 முதல் 2008 வரை பிள்ளை இல்லாத குறைபாட்டுக்காக சிகிச்சை பெற்றவர்கள். 1993ல் இக்குறைபாட்டுக்கு சிகிச்சை பெற்றவர்களை 2008ல் சிகிச்சை பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில்:1993ல் ஸ்பெர்ம் கவுண்ட் 38 மில்லியன் ஆக இருந்தது, 2008ல் 26 மில்லியன் ஆக குறைந்தது.

ஸ்பெர்மின் சர்வைவல் விகிதம் 1993ல் 61%, 2008ல் 47% (அதாவது ஆண் உடலில் இருந்து வெளியேறி கருப்பையில் பயணம் செய்கையில் எத்தனை சதவிகித ஸ்பெர்ம்கள் உயிருடன் உள்ளன எனும் விகிதம்)

ஸ்பெர்ம் மார்பாலஜி..அதாவது குறைபாடு உள்ள ஸ்பெர்ம் விகிதம், 1993ல் 40.51%, 2008ல் சரிபாதியாக 19.51% ஆக குறைந்தது.

இதற்கு சந்தேகிக்கபட்ட காரணங்கள் சமூக, பொருளாதார, உணவு காரணங்கள் என பொதுவாக கூறபட்டன.

தெற்கு கலிபோர்னியாவில் நிகழ்ந்த ஆய்வு ஒன்று இதற்கான சில காரணிகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. செவெந் டே ஆட்வனிஸ்ட் எனப்படும் சைவ கிறிஸ்துவர்களிடம் நிகழ்ந்த இந்த ஆய்வு இவர்கள் உணவில் சராசரி அமெரிக்கர்களை விட பழங்களும், காய்களும் அதிகம் இருப்பதாக தெரிவித்தது. இதனால் இவர்கள் வாழ்நாள் அதிகரித்தாலும் சராசரி அமெரிக்கரை விட இவர்களது ஸ்பெர்ம் கவுண்ட் மிக குறைவாக இருப்பதாக கூறுகிறது.

அமெரிக்கர்களின் சராசரி ஸ்பெர்ம் கவுண்ட் 70 மில்லியன், இவர்களுக்கு 50 மில்லியன். ஆக்டிவ் ஸ்பெர்ம் கவுண்ட் (ஸ்பெர்ம் மாடிலிடி இவர்களுக்கு 33%, அமெரிக்கருக்கு 60%).

ஸ்பெர்ம் கவுண்ட், ஸ்பெர்ம் மாடிலிடி, ஸ்பெர்ம் மார்பாலஜி மூன்றும் குறைவாக இருந்தால் அல்லது பார்டர் லைனில் இருந்தால் தந்தையாக முடியாது என பொருள் அல்ல. ஆனால் கர்ப்பம் தாமதமாகலாம், குறீப்பாக நார்மலான முறையில் பிள்ளை பெற விரும்பும் தம்பதியினருக்கு.

ஆய்வாளர்கள் யூகிக்கும் காரணங்கள்:
இவர்கள் உணவில் அதிகமாக இருக்கும் சோயாபீன்ஸ். சோயாபீன்ஸில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் ஸ்பெர்ம் கவுண்டை குறைத்து இருக்கலாம்.அதிக அளவில் பழங்கள், காய்கறிகளை உண்பதால் அதிக அளவில் பூச்சிகொல்லி மருந்துகளும் சேர்ந்திருக்கலாம். அது ஸ்பெர்ம் கவுண்ட்டை குறைத்து இருக்கலாம்

1000 ஆண்டுக்கு முன்பே சோயாபீன்ஸ் இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது.1930ல் இதை பிரபலமாக்க முயன்றவர்கள் மகாத்மா காந்தி மற்றூம் பரோடா சமஸ்தான மன்னர்(!)

ஆனால் 1970களில் தான் சோயாபீன்ஸ் விற்பனையும், உற்பத்தியும் இந்தியாவில் கொடிகட்டி பறக்க துவங்கியதாம், ஸ்கைராக்கட்டிங் என்கிறது "சோய் இன்ஃபோ சென்டர்" வலைதளம்
இதை அன்று இந்தியாவில் அதிக அளவில் பரப்பியவர்கள் ராக்பெல்லர் பவுண்டேஷன் மற்றூம் ருசி பிராண்டு.

நன்றி -செல்வன்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"