மயக்க மருந்து கொடுக்கும் போது நம் உடலில் நடப்பது என்ன?மயக்க மருந்து (Anaesthesia) என்றால் என்ன?
அறுவை மருத்துவம் நடைபெறம் போது நோயாளிக்கு எந்தவித வலி உணர்வு இல்லாதிருக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் நுட்பத்துக்கு, மருந்துக்கு மயக்க மருந்து என்பார்கள்.

மயக்க மருந்தின் வகைகள்
லோகல் அனெஸ்தீஸியா (LA)
தோலின் மீதும் சவ்வின் மீதும் பூசப்படும் மருந்து அல்லது தோலின் கீழே செலுத்தப்படும் ஊசி மருந்து லோகல் அனெஸ்தீஸியா எனப்படும். இது பிற மயக்க மருந்துகளோடுஒப்பிடும் போது பாதுக்காப்பானதும் எணிமையானதும் மயக்க மருந்து வல்லுநர் உதவியற்ற நுட்பமாகும்.

ரீஜினல் அனெஸ்தீஸியா (RA)
உடலின் சில பாகங்களுக்கு நரம்புகளின் வழி வலி குறிப்புகள் பரவா வண்ணம் ஒன்று அல்லது பல ஊசி மருந்துகளை ரீஜினல் அனெஸ்தீஸியா என்பார்கள். இதன் விளைவாக உடலில் குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப் போகும். நோயாளி உணர்வுடன் இருக்கம்போதே அவருக்கு அறுவை மருத்துவம் நடத்தலாம். அறுவை மருந்துவம் நடைபெறும் உடற்பகுதி பெரும்பாலும் மறைக்கப் பட்டிருக்கும். உணர்வுகளை அடக்கும் மருந்தும் தரப்படலாம். இதனால் நோயாளி அறுவை மருத்துவம் நடைபெறம் போது உறங்கி விடுவார். கை, கால், பிட்டம் முதலான இடங்களில் அறுவை மருத்துவம் நடைபெறம் போது ஸிகி தரலாம்.

பொது மயக்க மருந்து (General Anaesthesia)(GA)
தீவிர மயக்க மருந்தைப் பயன்படுத்தி நோயாளியை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துவதற்கு நிகி பயன்படும். வழக்கமான உறக்கத்தைப் போலன்றி இந்த ஆழ் உறக்கத்தின் போது நோயாளி பெயரிட்டு அழைத்தாலும், தொந்தரவு செய்தாலும் கூட விழிக்க மாட்டான். எனவே பொது மயக்க மருந்தைக் கொடுக்கும் போது, நோயாளி தன் சுற்றச் சூழ் நிலையையும், மிக முக்கியமாக அறுவை மருத்துவம் நடைபெறுவதையும் அதன் வலியையும் அறவே உணர மாட்டார். அறுவை மருத்துவம் நடந்து முடியுமட்டும் மயக்க மருந்து வல்லுநர் உடன் இருந்த அறுவைக்குப் பின் ஏற்படும் வலியைப் போக்கும் நிவாரணத்தை அளிப்பார்.

மயக்க மருந்து எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?
மயக்க மருந்து பாதுகாப்பானது. மயக்க மருந்து தொடர்பான மரணங்களும், பல்வேறு சிக்கல்களும் நாளடைவில் எண்ணிக்கையில் பெருமளவில் குறைந்து வருகின்றன. நோயாளியின் நலனைப் பேண மயக்க மருந்து வல்லுநர் உடனிருப்பது ஒரு மிக முக்கிய ஆக்கக் கூறாகும். உருவாக்கப் பட்டுள்ள புது கருவிகளும், நுட்பங்களும், மயக்க மருந்துகளும், மயக்க மருந்தின் பாதுகாப்பை அதிகரிக்க வழி வகுக்கின்றன.

மயக்க மருந்தின் மயக்கத்திலிருந்து விழிக்க முடியுமா?
மயக்க மருந்து அதிகம் கொடுத்தால் அதிலிருந்து விழிக்க முடியாமற் போவதவற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில் புது மயக்க மருந்துகள் விரைவில் செயலிழப்பதாலும் தரப்படும் மயக்க மருந்தின் அளவை சீர்படுத்தும் நுண்ணிய கருவிகளைக் கொண்டு மருந்து அளிக்கப் படுவதால் அதிக மயக்க மருந்து தரப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவானதாலும் நீங்கள் மயக்கத்திலிருந்து விழிக்க முடியாமற் போகும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

மயக்க மருந்தின் மயக்கத்தினிடையில் விழிக்கும் வாய்ப்புண்டா?
அறுவை மருத்துவம் நடந்து முடியுமட்டும் மயக்கத்தில் இருக்குமாறு மருந்து அளிக்கப் படுவதால் இடையே விழிப்பது பொதுவாக நடைபெறாது. எனினும் இதய வைபாஸ் அறுவை மருத்துவம் வயிற்றைக் கீறிய பிரசவம் போன்ற சிலவகை அறுவை மருத்துவங்களின் போது நோயாளி இடையே விழிப்புறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மயக்கத்திலிருந்து விழித்ததும் அதிக வலியை உணர்வேனா?
அது நடைபெறும் அறுவை மருத்துவத்தைப் பொறுத்தது. பொதுவாக அறுவையின் போது பெரும்பாலான நோயாளிகளுக்கு ஏதோ ஒருவித வலி நிவாரண மருந்து தரப்படும் என்றாலும் வெவ்வேறு நோயாளிகளுக்கு வெவ்வேறு நிலை வலி வாய்ப்புகள் இருக்குமாதலால் மயக்க உணர்விலிருந்து மீண்டவுடன் சற்று வலி இருக்கத்தான் செய்யும். அந்நிலையில் இன்னும் சற்றுக் கூடுதலான வலி போக்கி மருந்துகளைத் தந்த நோயாளியை மேலும் அமைதியுறுத்தலாம்.

மயக்க மருந்தின் பயனாக பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா?
பொதுவாக ஆனால் தற்காலிகமாக ஏற்படும் பக்க விளைவுகளாவன:-
• குமட்டலும் வாந்தியும்,
• தூங்கி வழிதல்,
• சிறுநீர்க் கழிப்பில் தற்காலிக இயலாமை
• தொண்டைக் கட்டுதல்
• தலைவலி

தசை வலி, பற்களுக்கும், கட்டப் பட்ட செயற்கை பற்களுக்கும், உதடுகளுக்கும், நாக்குக்கம் சேதம் எற்படலாம். தற்காலிக சுவாசக்கடினம், தற்காலிகமாக பேசுவதில் கடினம், தற்காலிக நரம்பு தளர்ச்சி முதலான சிறு தொல்லைகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.மிக அரிதாக என்றாலும் சில தீவிர சிக்கல்களும் ஏற்படலாம். உதாரணமாக இதய தடுப்பு, பக்கவாதம், தீவிர அலர்ஜியால் எதிர் விளைவுகள், மூளை மற்றும் நுரையீரல்கள் பாதிப்பு, சிறுநீரகம், ஈரல் இயங்காமை, நிரந்தர நரம்பு தளர்ச்சி, கண் காயம், குரல்வளை பாதிப்பு, சீதசக்காய்ச்சல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

மயக்க மருந்து பயன்படுத்தியதால் நினைவாற்றலை இழந்து விடுவேனா?
நீண்ட கால நினைவிழப்பு ஏதும் இருக்கவே இருக்காது. என்றாலும் ஆறுவை மருத்துவம் நடந்த போது நடை பெற்ற செயல்களை நினைவு கூற முடியாது போன்ற சில தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்படலாம். ஏனெனில் வலியைத் தணிப்பதற்கும் கவலையைக் குறைப்பதற்கும் உணர்வுகளை அடக்குவதற்கும் தரப்பட்ட சில மருந்துகள் தற்காலிகமாக சற்று நேர நினைவிழப்பை ஏற்படுத்தும் தன்மையுடையன.

பயன்படுத்த வேண்டிய மருந்துகள் எவை?
நீங்கள் மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய தேவையை உறுதி செய்ய உங்கள் மருத்துவரையோ, மயக்க மருந்து வல்லுநரையோ கலந்தாலோசியுங்கள்.

அறுவை மருத்துவதத்திற்கு முன்னர் ஏன் உண்ணாமலிருக்க வேண்டும்?
GS அல்லது RA வகை அறுவை மருத்துவம் செய்யும் போது நோயாளி உண்ணாமலிருப்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் நோயாளி நிகி-வில் இருக்கும் போது அவரது உடல் பாதுகாப்பு தன்னியல் நிகழ்வுகளை இழந்து விடும். அவரது வயிற்றில் ஏதேனும் உணவுப் பொருட்கள் இருந்தால் அவை பின்னோக்கி நகர்ந்து வாய்க்குள் வந்து மூச்சடைப்பை ஏற்படுத்தும். அவை நுரையீரல்களுக்குள் சென்று தீவிர மார்பு தொற்றுநோயை பரப்பி உயிருக்கே அபாய மேற்படுத்தக் கூடும்.

RA -யில் விரும்பிய விளைவுகளைக் கொணர முடியாத நிலையில் நோயாளியை மயக்க மருந்து வல்லுநர் நிகி-வுக்கு மாற்ற வாய்ப்பாக நோயாளி உணவுண்ணாமலிருப்பது மிகவும் இன்றியமையாதது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"