ரிசார்ட்டில் ஆபாச உடையுடன் மதுவிருந்தில் சிக்கிய நடிகைகள்


ஐதராபாத் நகரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடந்த `ரேவ்` பார்ட்டியில் கலந்துகொண்டு கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட நடிகைகள் காவல்துறையிடம் பிடிபட்டதால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பல நகரங்களில் உள்ள ரிசார்ட் மற்றும் பண்ணை வீடுகளில் , தற்போது `ரேவ் ` பார்ட்டி என்னும் மது விருந்து கலாசாரம் சமீபகாலமாக மிக வேகமாக பரவி வருகிறது. இளம் வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள் இடையே மிகவும் பிரபலமாகியுள்ள இந்த பார்ட்டியில் ஜோடி ஜோடியாக ஆண்களும் பெண்களும் அரைகுறை ஆபாச உடையில் பண்ணை வீடு மற்றும் ரிசார்ட் போன்ற இடங்களில் வார இறுதி மற்றும் பண்டிகை கால விடுமுறை ஆகிய நாட்களில் ஒன்றாக கூடி குடித்து கும்மாளம் போடுவதுதான் இந்த பார்ட்டியின் நோக்கம்.

இந்த பார்ட்டிக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளிடம் இருந்து பலத்த எதிர்ப்புகள் வந்துள்ள போதும் `அந்த எதிர்ப்புகளை கண்டுகொள்ளாமல் ஒரு பக்கம் ரேவ்`பார்ட்டிகள் நடத்தப்பட்டுதான் வருகின்றன. இந்நிலையில், பிரபல கடந்த தீபாவளி தினத்தின் மறுநாள் பிரபல நடிகைகள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொள்ளும் மது விருந்து ஐதராபாத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடப்பதாக ஐதராபாத் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிரடி ரெய்டு செய்ய முடிவு செய்த ஐதராபாத் காவல்துறையினர், பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு , ரேவ் பார்ட்டி நடப்பதாக சொல்லப்பட்ட ரிசார்ட்டை அதிரடியாக சுற்றி வளைத்தனர். இந்த ரெய்டில் மது குடித்தபடி போதையில் தள்ளாடியவாறு ஆபாச உடையில் இருந்த 10 ஆண்களும் 10 பெண்களும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் இவர்களில் ஒருசிலர் பிரபல தெலுங்கு நடிகைகள் என தெரிய வந்தது.

அந்த தெலுங்கு நடிகைகளை மட்டும் போலீஸார் அனுப்பிவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"