முதலிரவு முடிந்ததும் மனைவி கொலைஎகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் தனது மனைவி ஏற்கனவே கற்பிழந்தவர் என்பதை முதலிரவில் தெரிந்து கொண்டதால் ஆத்திரத்தில் பால்கனியில் இருந்து மனைவியை கீழே தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் ஒரு திருமணம் நடந்தது. பலவிதமான ஆசைக்கனவுகளுடன் முதலிரவுக்கு சென்ற கணவர், முதலிரவுக்கு பின்னர் தனது மனைவி கன்னித்தன்மை ஏற்கனவே இழந்தவர் என்பதை தெரிந்து கொண்டதால் ஆத்திரமான அவர், தனது மனைவியை தூக்கி 4 வது மாடியின் பால்கனியில் இருந்து கீழே தூக்கி போட்டுள்ளார்.

நான்காவது மாடியில் இருந்து விழுந்த அந்த பெண், ரத்தவெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கெய்ரோ போலீசார் புதுமாப்பிள்ளையை கைது செய்தனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"