அடல் பென்ஷன் யோஜனா திட்டம்


அடல் பென்ஷன் யோஜனா (APY) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) ஆகியவை இரண்டு திட்டங்களும் வருமான வரிச் சட்ட பிரிவு 80C கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பல்வேறு கூடுதல் நன்மைகளைத் தற்போது அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

என்பிஎஸ் திட்டம் அனைவருக்கும் பொருத்துமாறு இருக்கும்போது அடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒழுங்குபடுத்தப்படாத துறையினரை மட்டும் கவனம் செலுத்துகிறது. இந்த ஆண்டிற்கான வரி முதலீடுகளை இன்னும் நீங்கள் செய்யவில்லை என்றால் இந்த இரண்டு திட்டத்தின் கீழ் உங்கள் முதலீடுகளைச் செயல்படுத்தலாம். 1.5 லட்சத்திற்கு மேல் உள்ள தொகைக்குப் பல்வேறு கூடுதல் நன்மைகளை இந்தத் திட்டம் வழங்குகிறது. உங்களுக்கு NPS மற்றும் APY என்ற இரண்டு தேர்வுகள் உள்ளது. இவை இரண்டும் வெவ்வேறு அம்சங்களுடன் கூடிய அரசாங்கத்தின் ஓய்வூதிய திட்டங்களாகும்.

அடல் ஓய்வூதிய யோஜனா ஒழுங்கமைக்கப்படாத துறையில் கவனம் செலுத்தியுள்ள போதிலும், NPS அனைவருக்கும் பொருந்தும்படி உள்ளது. தவிர, நுழைவு வயது, பங்களிப்பு, வருமானம் மற்றும் வரி போன்றவற்றிலும் வேறுபாடு உள்ளது. நிதி திட்டமிடுபவர்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு பொருந்தக்கூடிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த முடிவை எடுக்க , ஓய்வூதிய திட்டங்கள் APY மற்றும் NPS இடையே அடிப்படை வேறுபாடுகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வயது அடல் ஓய்வூதியத் திட்டம் மற்றும் என்.பி.எஸ் ஆகிய இரண்டிற்கும் பதிவு செய்யக் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் அதிகப் பட்ச வயது வரம்பு வேறுபடுகிறது. NPS க்காக, அதிகபட்ச வயது 60 ஆண்டுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது, APY க்கு, இந்த வயது வரம்பு 40 ஆண்டுகள் ஆகும்.

முதலீட்டு வரம்பு NPS இல், முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை அளவுக்கு வரம்பு இல்லை.நிலையான ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு , முன் வரையறுக்கப்பட்ட மாதாந்திர பங்களிப்புகளில் APY செயல்படுகிறது. ஆனால் NPS முதலீட்டில், குறிப்பிட்ட பென்ஷன் இலக்கைப் பெறுவதற்குக் குறைந்த பட்ச மாதாந்திர பங்களிப்புத் தேவைப்படுகிறது. உதாரணமாக, 18 வயதில் ஆரம்பிக்கும் ஒருவர் மாதத்திற்கு 210 ரூபாய் செலுத்துவதால் 42 ஆண்டுகள் கழித்து அவருக்கு ரூபாய் 5000 ஓய்வூதியம் பெற முடியும்.

குறைந்தபட்ச முதலீடு/பங்களிப்பு ஒவ்வொரு குறைந்த பட்ச பங்களிப்பாக ரூபாய் 500/- மற்றும் ஒவ்வொரு ஆண்டின் குறைந்த பட்ச பங்களிப்புத் தொகையாக ரூபாய் 6000/- என்ற அளவை NPS வழங்குகிறது. சந்தாதார்கள் ஒவ்வொரு ஆண்டின் குறைந்த பட்ச தொகையை அந்த ஆண்டிற்குள் செலுத்த வேண்டும். APY மூன்று முறைகளில் பங்களிப்பை செலுத்த அனுமதிக்கிறது. காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர முறைகளில் பங்களிப்பு தொகையை இதில் செலுத்தலாம். ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் இரண்டு பங்களிப்புகள் நிச்சயம் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு 18 வயது APY சந்தாதாரர், மாதத்திற்கு ரூபாய் 42/- அல்லது அரையாண்டிற்கு ரூபாய் 248/- செலுத்துவதால் 60 வயதிற்குப் பின் மாதம் ரூபாய் 1000/- ஓய்வூதியமாகப் பெற முடியும்.

வருவாய் APY-ல் ரூபாய் 1000/- முதல் ரூபாய் 5000/- வரை முன் வரையறுக்கப்பட்ட தொகையை வருவாயாக வழங்குகிறது. இருப்பினும், NPS வருமானம் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது , சந்தை இயக்கம் மற்றும் நுழைவு நேரம் உட்படப் பல காரணிகளைப் பொறுத்து வருமானம் மாறுபடும்.

சந்தாதாரர் APY கணக்கு தொடங்க விண்ணப்பதாரர் ஒரு வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருத்தல் வேண்டும். NPS திட்டத்தில் NRI உட்பட இந்திய குடியுரிமை உள்ளவர்கள் அனைவரும் இணையலாம். இருப்பினும், NSDL மின்னாளுகை கட்டமைப்பின் வலைதளத்தின்படி OCI, PIO மற்றும் HUF போன்ற அட்டைதாரர்களுக்கு NPS கணக்கு தொடங்க தகுதி இல்லை.OCI என்பது, இந்தியக் குடியுரிமை இல்லாத இந்தியருக்கு வழங்கப்படும் வாழ்நாள் விசா நிலை. PCI என்பது இந்திய தோற்றுவாய்க் கொண்ட நபருக்கு வழங்கப்படும் ஒரு அடையாளம் ஆகும், HUF என்பது இந்து மதக் கூட்டுக்குடும்ப முறையாகும்.

நெகிழ்வுத்தன்மை APY விண்ணப்பதாரரின் வயதினை அடிப்படையாகக் கொண்ட முன் வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அட்டவணையில் வருகிறது மற்றும் தேர்ந்தெடுத்த அட்டவணையின் அடிப்படையில் ஒரு நிலையான ஓய்வூதிய தொகை கொடுக்கிறது. NPS, சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால் , விண்ணப்பதாரர் தனது விருப்பத்திற்கு ஏற்ப வெவ்வேறு சொத்து வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய விருப்பத்தை வழங்குகிறது. இந்தச் சொத்து வகுப்புகள் பங்கு, பெருநிறுவன கடன் மற்றும் அரசாங்க பத்திரங்கள் ஆகியவை அடங்கும். தங்கள் போர்ட்போலியோவை அட்ஜஸ்ட் செய்ய விரும்பாத சந்தாதாரர்களுக்காகத் தானியங்கி தேர்வு முறையும் NPS ல் உள்ளது.

கணக்கு வகை APY ஒரே வகையான வங்கி கணக்கை அளிக்கிறது. ஆனால் NPS இரண்டு வகையான வங்கி கணக்கை அளிக்கிறது. டயர் I மற்றும் டயர் II . டயர் I கணக்கு என்பது, சந்தாதாரர் 60 வயது முடியும் வரை அவர் கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது. டயர் II கணக்கு என்பது வாடிக்கையாளர் விரும்பும்போது எந்த ஒரு தடையும் இல்லாமல் பணத்தைத் திரும்பப் பெற முடியும். மேலும் டயர்II என்பது ஒரு கூடுதல் கணக்கு முறையாகும். டயர் I கணக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர் கூடுதலாக டயர் II வகைக் கணக்கையும் நிர்வகிக்க முடியும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை PFRDA இன் இணையத்தளம் - pfrda.org இன் படி., APY சந்தாதாரர்கள் "விதிவிலக்கான சூழ்நிலைகளில், 60 வயதிற்கு முன்னர் முன்கூட்டியே வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது இறப்பு / தீர்க்க முடியாத நோய் போன்ற காரணத்திற்காக மட்டும்.

ஒற்றுமை சந்தாதாரர் 60 வயதை அடைந்த பிறகு இரண்டு திட்டங்களிலும் ஓய்வூதியம் தொடங்குகிறது. NPS திட்டத்தின் அதே வரிச் சலுகைகளை APY திட்டத்திலும் அனுபவிக்கலாம். APY திட்டத்தின் கீழ் செலுத்திய பங்களிப்பு , 50,000/- ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80CCD பிரிவின் கீழ் வரி விலக்கும், 1.5 லட்சத்திற்கு மேல் வருமான வரி சட்டத்தின் கீழ் 80C பிரிவின் கீழ் வரி விலக்கும் கிடைக்கும். சந்தாதாரரின் இறப்பிற்குப் பின் அவருடைய துணைவருக்குப் பென்ஷன் வழங்கப்படும். மேலே கூறியவை அனைத்தும் NPS மற்றும் APY திட்டங்களுக்கான அடிப்படி விஷயங்களாகும்.பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"