விரும்பும் அளவில் விண்டோ


விண்டோஸ் இயக்கத்தில்,டெஸ்க் டாப் மீது உள்ள ஷார்ட்கட் ஐகான் மீது கிளிக் செய்தால், அதற்கான விண்டோ திறக்கப்படும் அளவு,மேக்ஸிமைஸ்/மினிமைஸ் அல்லது வழக்கம் போல நார்மல் என்ற மூன்றில் ஒன்றாக இருக்கும்.அவ்வாறின்றி, அந்த ஐகானுக்கான புரோகிராம் விண்டோ ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும் என்றால், அதனையும் செட் செய்துவிடலாம்.அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து,கிடைக்கும் மெனுவில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.திறக்கப்படும் கீழ் விரி மெனுவில் Properties மீது கிளிக் செய்திடுங்கள்.பின்னர் கிடைக்கும் சிறிய விண்டோவில் Run என ஒரு பாக்ஸ் கிடைக்கும்.இந்த பாக்ஸில் உள்ள கீழ் விரி அம்புக்குறியின் மீது கிளிக் செய்தால்,மூன்று அளவும் ஆப்ஷனாகத் தரப்பட்டிருக்கும்.இதில் நீங்கள் எந்த அளவிலான விண்டோவை விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து,ஓகே கிளிக் செய்து மூடவும். இனி, அந்த ஐகானைக் கிளிக் செய்து புரோகிராமினைத் திறக்கையில்,திறக்கப்படும் விண்டோ நீங்கள் செட் செய்த அளவிலேயே திறக்கப்படும்.

ஹைப்பர் லிங்க் கொடுத்து, அதில் கிளிக் செய்து திறக்கப்படும் விண்டோக்களையும் ஒரே அளவில் அனைத்தையும் திறக்கும்படி செட் செய்திடலாம். ஏதேனும் ஒரு ஹைப்பர்லிங்க் செல்லவும்.ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு,அதில் அழுத்தி, புதிய பக்கத்தினைத் திறக்கவும்.இப்போது திறக்கப்பட்ட விண்டோவினை, உங்கள் விருப்பப்படி, மினிமைஸ் அல்லது மேக்ஸிமைஸ் செய்திடவும்.தொடர்ந்து ஷிப்ட் கீயை அழுத்தியபடி வைத்தவாறே, அந்த விண்டோவினை File&close அல்லது close அழுத்தி மூடவும். வலது மூலையில் உள்ள X அழுத்தி மூட வேண்டாம். அடுத்து ஹைப்பர்லிங்க் திறக்கையில், இந்த அளவிலேயே விண்டோ திறக்கப்படும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"