வலைப்பூவின் Side Bar படங்களுக்கு இணைப்புக் கொடுக்க..இதற்கு முதலில் போட்டோஷாப்பில் 216pixels X 65pixels எனும் அளவில் இணைப்பு கொடுக்கவேண்டிய தளத்துக்குரிய லோகோவைப்பயன்படுத்தி விளம்பரப்பலகை ஒன்றினை செய்துகொள்ளுங்கள்.பின்னர் அதனை இணையத்தளத்தில் பதிவேற்றி விரும்பினால் அனிமேஷன் படமாக மாற்றிக்கொள்ளுங்கள்.பின்னர் இதற்குரிய "Direct HTML Link" அத் தளத்திலிருந்து Copy செய்துகொள்ளவும்.

பின்னர் உங்கள் Blogger Account இனுள் நுழைந்து அங்கு Page Element இல் HTML/ Java எனும் ஒரு புதிய Gadget திறந்துகொள்ளுங்கள்.

அங்கு கீழுள்ள கோடிங்கை COPY செய்து PASTE செய்யுங்கள்.

இதில் உங்களுக்குத் தேவையான அளவு விளம்பரப் பலகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.இங்கு
என்பதை தேவைக்கேற்ப கொடுத்து ஒவ்வொரு விளம்பரப் பலகைக்கும் இடையிலான இடைவெளியை நாம் மாற்றிக்கொள்ளலாம்.

இதில் "WEB PAGE LINK" என்ற இடத்தில் இணைப்புக் கொடுக்கவேண்டிய தளத்திற்குரிய URL ஐயும்,"DIRECT HTML LINK" என்ற இடத்தில் அவ்விளம்பரப் பலகைக்குரிய படத்தினை பதிவேற்றிய தளத்திலிருந்து கிடைக்கும் URL ஐயும் கொடுக்கவும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"