கூகிள் நிறுவனம் Google IME (Input Method Editor) எனும் கருவியை இலவசமாக வழங்கி வருகிறது.இந்த கருவியை உபயோகித்து விரும்பும் ஆங்கில ஒலியியல் (Transliteration) முறைப்படி யுனிகோட் வகையில் இணைய இணைப்பு இல்லாமலேயே தட்டச்சு செய்யலாம்.
இந்த கருவி மைக்ரோசாப்ட் வின்டோஸ் எக்ஸ்பி/ விஸ்டா/ விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் அனைத்துச் செயலிகளிலும் தமிழை நேரடியாக உள்ளீடு செய்யப் பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் ஆபீஸ், ஸ்டார் ஆபீஸ், கூகிள் டாக்ஸ் & ஸ்பிரட்ஷீட், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்னெட் எக்ஸ்புலோரர், பயர்பாக்ஸ், நெட்ஸ்கேப், அடோபி தொகுப்புகள் ஆகிய செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்யலாம்.
மேலும் யாகூ மெசெஞ்சர், கூகுள் டாக், வின்டோஸ் லைவ் மெசஞ்ஜர் மற்றும் AOL இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர் ஆகிய செயலிகளின் வழியாகத் தமிழில் அரட்டை அடிக்கலாம். இப்பொழுது இத்தொகுப்பின் மூலம் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள முடியும், யுனிகோட் தமிழிலேயே அரட்டை அடிக்கவும் முடியும். மேலும் யுனிகோட் தமிழ்த் தகவல்களை இணையம் வழியாகத் தேடவும் முடியும்.
Google IME கருவியை உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.பிறகு கண்ட்ரோல் பேனலுக்குச் சென்று Regional and Language Options ---- Languages tab ----Text services and input languages (Details) ----- Settings Tab ----- Google Tamil input என்பதை தேர்வு செய்து Key Settings பொத்தானை சொடுக்குங்கள்.திறக்கும் Change Key Sequence என்னும் வசனப் பெட்டியில் நீங்கள் விரும்பும் short cut கீயை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு உங்களுக்கு தேவையான செயலியை திறந்து கொண்டு short cut கீயை அழுத்தினால் கூகிள் தமிழ் உள்ளீடு செயல் பட துவங்கிவிடும்.இதில் கேரக்டர் பிக்கர் வசதியும் தரப்பட்டுள்ளது.
இந்த கருவியை உபயோகித்து தமிழ் மட்டுமின்றி Arabic, Bengali, Farsi (Persian), Greek, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Punjabi, Tamil, Telugu and Urdu ஆகிய மொழிகளையும் பயன்படுத்தலாம்.இதற்காக நீங்கள் கீழே உள்ள இணையத்தளத்துக்கு சென்று காணலாம்.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்