கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டையடிக்க

 

நாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஓன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும்.

அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? முடியும். invisible ஆனால் online இல் இருந்தால் அவர்களை எளிமையாக கண்டறியலாம். அதற்கு நீங்கள் GTALK ஐ install செய்திருக்க வேண்டும்.

இதனை நிறுவிய பின் GTALKஇல் INVISIBLEஇல் இருப்பவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக xxx@gmail.com என்ற மெயில் ஐடியை வைத்துக் கொள்வோம். அந்த ஐடியில் கிளிக் செய்து தனி windowஆக ஓபன் செய்த பின்னர் அங்கு வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்த பின்னர் go off the record என்பதையும் கிளிக் செய்யவும்.


இப்போது சாட் பாக்சில் xxx is offline. You can still send this person messages and they will receive them the next time they are online என காட்டும். இதை பார்த்தால் அந்த ஐடி offline இல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் onlineஇல் invisible ஆக இருக்கிறாரா என்பதை அறிய ஒரு hai good morning என என்டர் செய்து பார்க்கலாம். கீழே xxx@gmail.com is offline and can't receive messages right now என்ற செய்தி வந்தால் அந்த ஐடி உண்மையிலே offlineஇல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.


மேலே குறிப்பிட்டதை போன்ற செய்தி வரவில்லை என்றால் அவர் onlineஇல் ஆனால் invisibleஇல் இருக்கிறார். எனவே அந்த செய்தி காட்டவில்லை. அப்புறமென்ன உங்கள் சாட்-க்கு பதில் வந்தால் உங்கள் சாட்டை தொடரலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"