ரேபிட்ஷேர் (Rapidshare) எனப்படும் கோப்புப்பகிர்வான் தளத்தில் உலகமெங்கும் உள்ள பயனர்கள் எண்ணற்ற கோப்புகளை ஏற்றி வைத்துள்ளனர்.ஏற்றப்பட்ட கோப்புகளின் சுட்டிகளை இணையத்தில் வெளியிடுவார்கள்.அந்தச் சுட்டி தெரிந்தவர்கள் அதில் இணைத்துள்ள கோப்பை தரவிறக்கிக் கொள்ளலாம்.
இந்தக் கோப்புகளின் சுட்டியை ஏதேனும் ஒரு உலவியின் முகவரிப் பகுதியில் உள்ளிட்டால், இலவசப் பயனர்களுக்காக 30 முதல் 180 வினாடிகள் வரை காத்திருக்கச் சொல்லும். அதன் பின்னரே அந்தக் குறிப்பிட்ட கோப்பினை தரவிறக்கம் செய்ய அனுமதி கொடுக்கும்.
உதாரணமாக நம்மிடம் 10 சுட்டிகள் இருக்கின்றன என்றால் அனைத்தையும் ஒவ்வொன்றாக தரவிறக்கம் செய்தால் நிறைய நேரமிழப்பு நேரிடும்.ஆனால் அடுத்தடுத்த கோப்புகளை தொடர்ச்சியாக தரவிறக்கம் செய்ய அனுமதியளிக்கும் வகையில் இந்த மென்பொருள் செயல்படுகிறது.
மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்