கணினியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்க..


நாம் கோப்புக்களை தரவிறக்கம் செய்வோம். அதை ஏதாவது ஒரு போல்டரில் போட்டு வைப்போம். சில நேரங்களில் அதனை பிறகு படிக்கலாம் என்று எண்ணி மறந்துவிடுவொம். சில நாட்கள் கழித்து மீண்டும் அதே கோப்பை இணையத்தில் மறுபடியும் தரவிறக்கி வேறு ஒரு போல்டரில் இதே போன்று போட்டு வைத்து விட்டு மறுபடியும் மறந்துவிடுவோம். இதுபோல் எண்ணற்ற கோப்புகள் உங்கள் கணணியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.இதனால் உங்கள் கணிப்பொறியின் வேகம் குறையலாம். இவ்வாறு இரண்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட ஒரே வகையான பல கோப்புகளை கண்டுபிடிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது.


இது தேடித்தரும் கோப்புகளை இந்த மென்பொருள் வழியாக preview பார்க்கும் வசதியும் உண்டு. அத்துடன் உங்கள் கணணி மட்டுமல்லாமல் நெட்வொர்க், யுஎஸ்பி ட்ரைவ், பிளாப்பி, எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் போன்றவைகளிலும் ஒரே வகையான கோப்புகளை தேடித்தரும்.இதன் மூலம் தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணினியின் வேகத்தை அதிகரிப்பதுடன் கணினியின் வன்தட்டு ஃப்ரீ இடத்தை அதிகரிக்கவும் செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள விளக்கப் படங்களை பாருங்கள்.

 


மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"