கோப்புக்களை உலவியின் மூலமாக பகிர்ந்துகொள்ள


சாதாரணமாக கோப்புக்களை பகிர்ந்து கொள்ள ஏதாவது இணையத்தில் கோப்புகளை தரவேற்றி அங்கே தரப்படும் லிங்க்-ஐ பகிர்ந்து கொள்வீர்கள்.ஆனால் இது போன்ற தருணங்களில் மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் உங்கள் கணினியையே இணைய வழங்கியாக (Web Server) மாற்றி செய்ய இயலும். இதனை ஒபேரா உலவி Unite என்ற பெயரில் வழங்குகிறது.

ஒபேரா உலவியை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பின்னர் Unite நீட்சியை கீழே சென்று தரவிறக்கி உலவியில் நிறுவி கொள்ளுங்கள்.

பின்னர் மெனு பட்டைக்கு கீழே Panels என்பதனை கிளிக் செய்து மூன்றாவதாக உள்ள Unite கிளிக் செய்து கொள்ளுங்கள். File Sharing, Photo Sharing உள்ளிட்ட சேவைகளை நீங்கள் தேர்வு செய்து கொள்ளவும்.

இந்த சேவைக்காக புதிய உறுப்பினர் கணக்கு உருவாக்கி கொள்ள வேண்டும்.பின்னர் எந்த கோப்பினை பகிர வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதனுடைய URL , Password கிடைக்கும். அதனை நீங்கள் பகிர வேண்டியவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் அந்த URL ஐ அணுகுவதன் மூலம் Password அளித்து உங்கள் கோப்புகளை பார்க்க / தரவிறக்கி கொள்ள முடியும்.முக்கியமாக கோப்புகள் / புகைப்படங்களை பகிரும் போது உங்கள் கணினி இயக்கத்தில், இணைய இணைப்புடன் இருக்க வேண்டும்.உங்கள் கோப்புகள் வேறெங்கும் ஏற்றப்படுவதில்லை.உங்கள் கணினியில் இருந்தே நேரடியாக உபயோகப்படுத்தபடுகிறது. எனவே உங்கள் கணினி இயக்கத்தில் (ON) இருப்பது முக்கியம்.


செயல் முறை காணொளியை காண கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"