இளம்பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்த இளைஞர் கைது!


பக்கத்து வீட்டு குமரிகள் ஆடை மாற்றுகின்ற காட்சிகளை மிகவும் கெட்டித்தனமாக மடிக் கணனிக் கமரா மூலம் படப் பிடிப்புச் செய்த மொறட்டுவ இளைஞன் போலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பக்கத்து வீட்டு குமரிகளில் ஒருத்திக்கு வயது 19. இளைஞனின் காதலி இவர். மற்றக் குமரிக்கு வயது 17.

சம்பவ தினம் அதிகாலையில் குமரிகளின் வீட்டுக்கு மடிக் கணனியுடன் வந்து இருக்கின்றார் இளைஞன்.கணனியில் பற்றரி சார்ஜ் இறங்கி விட்டது என்றும் சார்ஜ் ஏற்ற அனுமதி தர வேண்டும் என்றும் கேட்டு இருக்கின்றார்.குமரிகள் உடை மாற்றுகின்ற அறையில் சார்ஜரை பிளக்கில் போட்டார். குமரிகளும் உதவி செய்தனர்.ஆனால் வேறு எவருக்கும் தெரியாமல் கணனியை ஓன் பண்ணி விட்டு போய் விட்டார் இளைஞன்.

குமரிகளும் வழக்கம் போல அறையில் உடை மாற்றி வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றனர்.பல மணி நேரங்களின் பின் இளைஞன் வந்து இருக்கின்றார். இக்குமரிகளின் 15 வயதுச் சகோதரன் மாத்திரம் வீட்டில் இருந்து இருக்கின்றார். இளைஞன் கணனியை சரி பார்த்து இருக்கின்றார்.

இதன்போது இளைஞன் வீடியோ ஒன்றை பார்வையிட்டமையை குமரிகளின் சகோதரன் நோட்டமிட்டார். சகோதரிகள் உடுப்பு மாற்றுகின்ற காட்சிகளை வீடியோ கொண்டிருக்கின்றது என கண்டு கொண்டார்.இளைஞனுக்கு இது தெரியாது. கணனியுடன் போய் விட்டார்.சிறுவன் தன் அப்பாவிடம் வீடியோ குறித்து சொன்னார். தகப்பன் கோபத்தின் உச்சத்துக்கே போய் விட்டார்.கல்கிசை பொலிஸ் நிலையத்துக்கு வந்து முறைப்பாடு செய்தார். இதை அடுத்தே கைது நடவடிக்கை இடம்பெற்று உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"