காதலனை வசியம் செய்ய சாலையில் நிர்வாணமாக நடந்த பெண்

பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் போலீசார் ரோந்து சென்ற போது ஒரு இளம்பெண் நிர்வாணமாக சாலையில் நடந்து சென்றார். இது குறித்து பெண் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த பெண்ணிற்கு உடையுடுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த நான், பிளஸ் 2 வரை படித்துள்ளேன். எங்கள் பகுதியில் உள்ள ராமசந்திரன் என்பவரை காதலித்து, அவருடன் பல பகுதிகளில் உல்லாசமாக சுற்றி திரிந்தேன். இந்நிலையில், என்னை ஏமாற்றிய ராமசந்திரன், வேறொரு பெண்ணை மணந்தார்.

என்னை ஏமாற்றிய ராமசந்திரனை மீண்டும் அடைய, ஜோதிடர் ஒருவரை நாடி யோசனை கேட்டேன். அவர் முழு அமாவாசை இரவில், 3-க்கும் மேற்பட்ட கோவில்களில் நிர்வாணமாக சென்று வழிப்பட்டால், ராமசந்திரன் மீண்டும் என்னிடம் திரும்ப வந்துவிடுவார் என கூறினார்.எங்கள் ஊரில் நிர்வாண பூஜை செய்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால், சென்னை பொழிச்சலூரில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்து தங்கினேன்.

அமாவாசை இரவில் பூஜை செய்ய, குளித்துவிட்டு வெளியே போய்விட்டு வருவதாக அக்காவிடம் கூறிவிட்டு சாலையில் நடந்தேன்.பம்மல் கிருஷ்ணா நகர் அருகில் சென்று இரவு 12 மணியளவில் உடைகளை அவிழ்த்துவி்ட்டு முழு நிர்வாணமானேன். பின்னர் சாலையில் யாருக்கும் தெரியாமல் இருக்க முடியை அவிழ்த்து தலைவிரிக் கோலமாய் சாலையில் நடந்து சென்று, பம்மல் கிருஷ்ணா நகரில் மூடியிருந்த கோவில் முன் நிர்வாணமாக வழிபட்டேன்.
பின்னர் புத்துக்கோவிலில் வழிபட்டேன்.

பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் கோவிலுக்கு செல்ல சாலையில் நிர்வாணமாக சென்றபோது, போலீசார் என்னை பார்த்துள்ளனர். என்னை அழைத்து கொண்டே வந்தனர்.
அவர்களிடம் தப்ப ஓடினேன். ஆனால் என்னை பிடித்து சேலையால் போர்த்தி, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துவிட்டனர், என்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"