பெண்கள் கல்லூரிக்குள் நிர்வணமாய் புகுந்த வாலிபர்

தூத்துக்குடியில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வாலிபர் ஒருவர் நிர்வாணமாக நுழைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசார், நிர்வாண வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் பெண்கள் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று உள்ளது. காலை 10 மணியளவில் நிர்வாண நிலையில் வாலிபர் ஒருவர் மாணவிகள் விடுதிக்குள் புக முயற்சித்தார். இதை பார்த்த மாணவிகள் அலறியடித்து வெளியே ஓடிவந்து காவலாளி துணையுடன் அந்த நபரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பிறந்த மேனியுடன் புகுந்த அந்த நபர் யார் என்று அடையாளம் தெரியாமல் இருக்க லுங்கியால் முகத்தை மூடியிருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் இதே நபர் நிர்வாண கோலத்தில் கல்லூரிக்குள் புகுந்துள்ளார். அப்போதும் அவரை பிடிக்க முயன்றபோது தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் கல்லூரி நிர்வாகத்தினர் புகார் செய்தனர். அந்த நபரை பிடிக்க முடியாத நிலையில் மீண்டும் நேற்று காலை அதே நபர் நிர்வாண கோலத்தில் வந்தததால் கொதிப்படைந்த மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர்.

தகவல் அறிந்ததும் தென்பாகம் போலீசார் விரைந்து வந்து கல்லூரி நிர்வாகத்தனரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சைக்கோ மனிதனை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.

நிர்வாணமாக புகுந்த வாலிபரை கைது செய்ய கோரி மாணவிகள் தொடர்நது உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"