மனைவியின் தாய்ப்பாலில் பாலாடைக் கட்டித் தயாரித்து விற்ற மனிதர்

தாய்ப்பாலை நாம் எல்லாம் புனிதமாக கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்கர் ஒருவர் அதை விற்பனைப் பொருளாக்கி தாய்மையின் மேன்மையை கேள்விக்குறியாக்கி விட்டார்.அந்த நபரின் பெயர் டேணியல் அங்கரர். நியூயார்க்கைச் சேர்ந்த க்ளீ பிராசரி என்ற ஹோட்டலின் உரிமையாளர். இவரே ஒரு சமையல் கலைஞரும் கூட.

இவர் தனது மனைவி லோரி மேசானின் தாய்ப்பாலிலிருந்து பாலாடைக் கட்டியைத் தயாரித்துள்ளார்.பின்னர் அதை தனது குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். அத்தோடு நில்லாமல் அதை விற்கவும் ஆரம்பித்து விட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்க உணவுத்துறை இந்த நூதன பாலாடைக் கட்டி விற்பனைக்குத் தடை போட்டு விட்டதாம்.

இதுகுறித்து டேணியல் கூறுகையில், நானாவது பாலாடைக் கட்டியைத்தான் தயாரித்தேன். ஆனால் ஆல்டன் பிரவுன் என்பவர் தனது மனைவியின் தாய்ப்பாலிலிருந்து வெண்ணையே எடுத்துள்ளார் என்றார்.

தொடர்ந்து டேணியில் கூறுகையில், நான் ஒரு சமையல் கலைஞர். எதையாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். எனவேதான் இதைக் கண்டுபிடித்தேன். எனது மனைவியும் இதற்கு ஒத்துழைத்தார். எனது குழந்தைளும் அதை விருப்பமுடன் சாப்பிட்டனர்.
பசும்பாலின் சுவைதான் அதில் இருந்தது. நான் ஆஸ்திரியாவில் சிறுவனாக இருந்தபோது சுவைத்த பசும்பாலின் சுவை எனது மனைவியின் தாய்ப்பாலில் தயாரித்த பாலாடைக் கட்டியில் தெரிந்தது என்கிறார் டேணியில்.

அத்தோடு நில்லாமல் தனது மனைவியின் தாய்ப்பாலிலிருந்து பாலாகை கட்டியைத் தயாரித்தது எப்படி என்ற விளக்கத்தையும் தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார் டேணியல்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"