சினிமா ஸ்டைலில் போலீசுக்கு நிர்வாண போஸ் கொடுத்த பெண்

கரூரில் கள்ள லாட்டரி வியாபாரியை பிடிக்க சென்ற போலீசார் முன் ஆடையை அவிழ்த்துவிட்டு ஒரு பெண் நிர்வாண போஸ் கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு நடித்து வெளியான படத்தில் ஒரு காட்சி. அதில் போலீஸ் ஏட்டாக வரும் வடிவேலு, ஒரு வீட்டுக்குள் மறைந்து கொண்டிருக்கும் கள்ளச் சாரய பெண் வியாபாரியை கைது செய்யப் போவார்.யாராவது கைது செய்ய வந்தால் அணிந்திருக்கும் சேலையைக் கழற்றிவிட்டு நிர்வாணமாகிவிடுவதாக அந்த பெண் மிரட்டுவார்.

மீறி வீட்டுக்குள் போன வடிவேலுவுக்கு நிர்வாண போஸ் கொடுத்து மிரட்டும் அந்த பெண், வடிவேலுவின் டிரஸ்ஸையும் கழற்றி அவமானப்படுத்துவார். கிட்டத்தட்ட  இந்தக் காட்சி உண்மையிலேயே கரூரில் நடந்துவிட்டது.கரூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்தனர். இதில் செல்வராஜ் என்ற வியாபாரி ஓடிச்சென்று தன் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்.

அவரை விரட்டிச்சென்ற போலீசார் வீட்டுக் கதவை தட்டினர். அப்போது வீட்டுக்குள் இருந்த செல்வராஜின் மனைவி நிர்மலா தனது ஆடையைக் களைந்துவிட்டு போலீசுக்கு எதிராக கூச்சலிட்டார்.வேறு மாதிரியாக கதை கட்டிவிடுவார்கள் என மிரண்ட போலீசார்
ரெய்டை கைவிட்டு விட்டு பின்வாங்கினர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"