'உயிர் உலை' - கூடங்குளம் அணு உலைக்கெதிரான ஆவணப்படம்

இடிந்தகரை மக்களின் கடலும் கடல்சார்ந்த வாழ்க்கை நிலமும் நிலம் சார்ந்த போராட்டம் இவற்றின் பதிவே இந்த ஆவணப்படம்.

'அவர்கள் கடலில் பிழைப்பு நடத்துபவர்கள். நிலத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என பிற மக்கள் நினைப்பதால் அவர்களின் போராட்டங்களின் தீவிரம் உறைக்கவே இல்லை'

என்று யதார்த்தத்தை உரக்க உறைக்கச் சொல்கிறது இந்தப்படம்.

கரையில் நின்று கடலைப்பார்த்து எப்போது கணவன் வருவான் என்று காத்திருந்த மீனவப் பெண்கள் எப்படிக் கடலுக்குள் இறங்கினார்கள் என்று பெண்கள் கண்ணோட்டத்திலும் பேசுகிறார் கவிஞர் குட்டி ரேவதி. 'அணு உலைக்கு அடிக்கல் நாட்டும்போதே எதிர்த்திருக்க வேண்டியதுதானே?' என்கிற பொதுமக்களின் கேள்விக்கு 26 ஆண்டுகளுக்குமுன் மக்கள் போராட்டத்தால் மூன்றுமுறை அடிக்கல் நாட்டுவிழா தள்ளிப்போனதை பத்திகைச்செய்தியோடு நிரூபிக்கிறார்கள்.

நடுநடுவே கார்டூன்கள் அணு உலகள் அமைப்பதற்கான விதிகள் இடிந்தகரையில் நடக்கும் விதிமீறல்கள் என மறுக்கமுடியாத தகவல்களோடு ஓங்கிப் பேசுகிறது இந்த ஆவணப்படம். 'அணு உலை தேவையா? இல்லையா?' என்ற கேள்விக்கு ஆணித்தரமாகப் பதில்சொல்கிறது இந்த ஆவணப்படம்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"