காதலனை கட்டிப்போட்டு கல்லூரி மாணவி கற்பழிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பக்கமுள்ளது சந்தாபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல காவேரிப்பட்டணம் பக்கமுள்ள வேலம்பட்டியை சேர்ந்தவர் சேரன் (வயது25). கார் டிரைவர். இவரும், கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.

மாணவி, கல்லூரி முடிந்ததும், தனது காதலனை சந்தித்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் ஒரு காரில் ராயக்கோட்டைக்கு வந்தனர். அங்கு கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் போடம்பட்டி பிரிவு சாலை பக்கமுள்ள மலைப்பாதைக்கு சென்றனர்.

அங்கு காதலர்கள் 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்தநேரம் 4 பேர் அங்கு மது குடிப்பதற்காக வந்தனர். அவர்கள் காதலர்கள் 2 பேரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கு சென்றனர். அங்கு மாணவியை கண்ட அவர்கள் திடீரென சேரனை தாக்கினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத கல்லூரி மாணவி அதிர்ச்சியில் அலறினார்.

இதையடுத்து அந்த கும்பல், சேரனை இழுத்துச் சென்றனர். பின்னர் அந்த கும்பல் கல்லூரி மாணவி அணிந்திருந்த சேலையை உருவினார்கள். அந்த சேலையால் சேரனை அங்குள்ள மரத்தில் கட்டிப்போட்டனர். பின்னர் 4 பேரும், கல்லூரி மாணவியை அவரது காதலன் சேரன் முன்னிலையிலேயே கதற, கதற கற்பழித்தனர். மேலும் இதை தாங்கள் வைத்திருந்த செல்போனில் வீடியோவாகவும், போட்டோவும் எடுத்ததாக கூறப்படுகிறது.

காமக்கொடூரன்கள் 4 பேரிடம் சிக்கிய, கல்லூரி மாணவி ‘‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’’ என்று கூச்சலிட்டார். அந்த சமயத்தில் அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு வந்தனர். அங்கே 4 பேர் கொண்ட கும்பல் மாணவியை பலாத்காரம் செய்வதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை பார்த்ததும் 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

இது குறித்து அந்த பகுதியில் இருந்த மக்கள் ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்–இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கல்லூரி மாணவியையும், அவரது காதலன் சேரனையும் மீட்டனர்.

காயம் அடைந்திருந்த அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இது பற்றிய தகவல் அறிந்ததும், சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அமல்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் கற்பழிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கற்பழிப்பில் ஈடுபட்டது ராயக்கோட்டை அருகே உள்ள எச்சம்பட்டியை சேர்ந்த கோபால் என்பவரின் மகன் சுப்பிரமணி (28), ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் மணி (22), ரெயில்வே காலனியை சேர்ந்த பிரகாஷ் (24) மற்றும் ஜிட்டாண்டஹள்ளியை சேர்ந்த பிரகாஷ் என தெரியவந்தது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"