செக்சுக்கு மறுத்த காரணத்தை கணவன் பட்டியலிட்டதை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மனைவி


அமெரிக்காவில் உள்ள கணவர் ஒருவர் தனது மனைவி தன்னோடு செக்ஸ் உறவு கொள்ள மறுத்த நாட்களையும், அதற்கு அவர் கூறிய காரணங்களையும் எக்ஸல் ஷீட்டில் குறித்து வைத்து, அதை மனைவிக்கு இமெயிலும் அனுப்பியுள்ளார். இந்த தகவலை அந்த மனைவி சமூக வலைத்தளம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளம் நேற்று ஒரு பெண் மிகவும் வருத்தமாக தனது கணவர் குறித்து கூறிய புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது கணவர் செக்ஸ் உறவுக்கு அழைத்தபோது தான் மறுத்த நாட்களை எக்ஸல் ஷீட்டில் குறித்து வைத்து தனக்கு இமெயில் அனுப்பியுள்ளதால் தான் மிகவும் கவலைப்படுவதாகவும் இதுகுறித்து பயனாளிகள் தனக்கு ஆலோசனை கூறி உதவும்படியாகவும் கூறியுள்ளார். தான் செக்ஸ் உறவுக்கு மறுத்ததன் காரணம், தனது பணியில் மிகவும் பிசியாக இருந்ததுதான் என்றும், கணவரை வெறுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த பெண்ணின் கணவர் வெளியிட்ட எகஸ்ல் ஷீட்டின்படி ஜூன் மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தான் உறவுக்கு சம்மதித்துள்ளதாகவும், மற்ற நாட்களில் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தான் கணவரை தட்டிக்கழித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணுக்கு சமூகதள பயனாளிகள் பலர் பலவிதமாக அறிவுரை கூறியுள்ளார்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"