தலை கீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை சரி செய்யும் மென்பொருள்

http://denaldrobert.blogspot.com/


மொபைல் கேமரா வசதியால் எளிதாக பலரும் வீடியோக்களை எடுப்பதுண்டு. வீடியோ எடுக்கும் போது அதன் கோணத்தை(Angle) நேராக வைக்காமல் மாற்றி வைத்து எடுத்து விடுவார்கள். இப்படி மாற்றி எடுக்கப்பட்ட வீடியோவை மொபைலில் வேண்டுமானால் அப்படியும் இப்படியும் திருப்பி வைத்து பார்க்கலாம். அதனையே கணிணியில் பார்க்கும் போது கணிணியின் திரையைத் திருப்ப முடியுமா?

VLC பிளேயரில் அந்த நேரத்திற்கு Rotate செய்து பார்க்க வசதியிருக்கிறது. சரி இந்த வீடியோக்களை நாம் விரும்பும் கோணத்திற்கு நிரந்தரமாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

இணையத்தில் வீடியோக்களை Rotate செய்வதற்கு இலவசமான இரண்டு மென்பொருள்கள் கிடைக்கின்றன. இவை வீடியோக்களை இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக மற்றும் கீழ்க்கண்ட வகைகளிலும் சுழற்றச்செய்து கன்வர்ட் செய்து தருகின்றன.
  •  rotate video 90 CW
  •  rotate video 180
  •  rotate video 90 CCW
  •  flip video horizontal
  •  flip video vertical
  •  flip video vertical and rotate 90 CW
  •  flip video vertical and rotate 90 CCW.
1.X2X Free Video Flip and Rotate

இந்த மென்பொருளில் வீடியோ வேண்டுமளவுக்கு வெட்டிக் கொள்ளவும் முடியும். AVI, MPG, MPEG, MP4, WMV, ASF, MOV, QT, 3GP, 3G2, AMV, FLV போன்ற அனைத்து வகை வீடியோக்களையும் ஆதரிக்கிறது. மாற்றப்பட்ட வீடியோவை MP4 வகையில் கொடுக்கும்.

தரவிறக்கச்சுட்டி: http://www.x2xsoft.com/productlist/fliprotate.html

2.Free Video Flip and Rotate (DvdVideoSoft)

இந்த மென்பொருளும் சிறப்பான வகையிலும் வேகமாகவும் வீடியோவை சுழற்றச் செய்து தருகின்றது. இது நாம் கொடுக்கும் வீடியோ பார்மேட்டிலேயே மாற்றித் தருகின்றது.

தரவிறக்கச்சுட்டி: http://www.dvdvideosoft.com/products/dvd/Free-Video-Flip-and-Rotate.htm

கேன்சர் ஒரு நோயே இல்லை !!

https://denaldrobert.blogspot.com/


புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.
இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.

"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது.

கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோவிலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டு செல்லப்படுகிறது.

DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.

கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள் :

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:
  • அப்ரிகாட்
  • லிமா பீன்ஸ்
  • ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
  • கோதுமை புல் ( Wheat Grass)
  • பாதாம்
  • ராஸ்பெரிஸ்
  • ஸ்ட்ராபெர்ரி
  • ப்ளாக்க்பெரி
  • பிளூபெர்ரி
  • பக் வீட் ( Buck Wheat )
  • சோளம்
  • பார்லி
  • குதிரைவாலி
  • முந்திரி
  • மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts )
  • முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.
இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.

அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100
முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

தெரிந்து கொள்ளுங்கள் # 1

http://denaldrobert.blogspot.com/

  1. கேன்சர் ஒரு நோயே இல்லை !!
  2. உங்கள் செல்பேசிகளில் தங்கம் ?
  3. திடீர் மரணத்தை தவிர்க்க "மூன்றரை நிமிடங்கள்"
  4. விமான இருக்கைகளின் நிறங்களில் இவ்வளவு விசயங்களா !!
  5. மாதக்கடைசி பணப்பற்றாக்குறையை எப்படி சமாளிக்கலாம்?
  6. மணி பேக் பாலிசி vs என்டோமென்ட் பாலிசி
  7. கடலை எண்ணெய்யின் நன்மைகள்
  8. வாழை இலையில் சாப்பிடுவதின் பயன்கள்
  9. வாடகை வீட்டின் முன்பணத்திற்கு சட்டத்தின் வரையறை
  10. இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி: அதிகாரங்கள்
  11. அடல் பென்ஷன் யோஜனா திட்டம்
  12. 'ரிவர்ஸ் மார்ட்கேஜ்' வீட்டுக் கடன் திட்டம்
  13. சிவன் பாம்பை ஆபரணமாக அணியும் ரகசியம்!
  14. CV vs RESUME vs BIO DATA மூன்றுக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ளுங்கள்!!
  15. இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்
  16. உபவாசம் – விரதம் அல்லது உண்ணா நோன்பு பற்றிய அறிவியல் உண்மைகள்
  17. மயக்க மருந்து கொடுக்கும் போது நம் உடலில் நடப்பது என்ன?
  18. பணத்தை சுருட்டும் மோசடி தொ(ல்)லைபேசிகள்! உசாரைய்ய்ய்யா ! உசாரு!!
  19. மோட்டார் இன்சூரன்ஸ்
  20. போரடிப்பதற்குக் காரணமான மனநிலைகள்!
  21. தமிழர்களின் பாரம்பரியம் "பூப்புனித நீராட்டுவிழா "
  22. PUSH TO TALK (புஷ் டூ டாக்) : மொபைல் தொழில்நுட்பம்
  23. மூலிகைப் பொடிகளின் பயன்கள்!!
  24. மைக்ரோ-இன்சூரன்ஸ் பாலிசி!
  25. கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்
  26. எச்சரிக்கை : எய்ட்ஸைவிட 100 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடிய நோய்
  27. ஏடிஎம் இயந்திரம் தோன்றிய சுவாரஸ்யமான சம்பவம்
  28. பெண்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியமான ஸ்கேன் பரிசோதனைகள்
  29. மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெற எளிய வழி!!
  30. வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்ள முன்னோர்கள் செய்த வழிகள்!
  31. "கொலஸ்டிரால்" நல்லதா? கெட்டதா?
  32. தமிழர் திருமணங்களின் பாரம்பரிய பொன்னுருக்கல் நடைமுறை
  33. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படையான மனோதத்துவ வித்தியாசங்கள்?
  34. பன்னிரென்டு ராசிக்குமான கற்கள்
  35. தெரியுமா? தடுப்பூசிகள் மூலம் நோய்க்கிருமிகளை தான் செலுத்துகிறார்கள்!
  36. " தாலி "யின் மகத்துவங்கள் !!
  37. மனித மூளையை கணினியுடன் இணைக்கும் BCI தொழிநுட்ப ஆராய்ச்சி!!
  38. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சாசன பிரிவு 370
  39. தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!!
  40. வாழ்க்கையின் ரகசியங்களை தெரிந்து கொள்ள உதவும் கவர்ச்சி விதியை பயன்படுத்துவது எப்படி?
  41. நம்பினால் நம்புங்கள் : வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்கலாம்!!
  42. 11 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் : தேர்தல் ஆணையம்
  43. தமிழக அரசு மானியம் வழங்கும் மேற்கூரை சூரியசக்தி திட்டம்
  44. குண்டு துளைக்காத ஆடைகளை கண்டுபிடித்த ரகசியம்!!
  45. திருநங்கைகளுக்கு (அலி) எப்படி இருக்கும்….?
  46. விமானங்கள் நடு வானில் காணமல் போகும் ரகசியம்!!
  47. பெண்களின் வித்தியாசமான கல்யாண ஆசைகள்
  48. ஏன் மருத்துவக் காப்பீடு கட்டாயம் தேவை?
  49. உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்! ஆய்வில் தகவல்!!
  50. குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனைகள்!!
  51. மாதவிடாய் பெண்கள் ஆலயங்களுக்கு செல்ல மறுக்கப்படும் காரணங்கள்!!
  52. மனையடி சாத்திரமும் கிணறும்!
  53. வாழ்நாள் முழுவதும் எரியும் மின்சாரம் இல்லாத விளக்கு!!
  54. கண் தானம் செய்வது எப்படி?
  55. தூக்கத்தின் போது படுக்கையறைக்கு "அமுக்குவான் பேய்" வரும் ரகசியம்!
  56. மொபைல் ஃபோன் கம்பெனிகள் எக்ஸ்சேஞ் ஆஃபர் அளிப்பதன் ரகசியம்!!

பக்கம் 1
http://denaldrobert.blogspot.com/2013/05/knowledge-page-1.html

உங்கள் செல்பேசிகளில் தங்கம் ?

http://denaldrobert.blogspot.com/


பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்தெடுப்பதன் மூலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து செல்வத்தை உருவாக்க முடியும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் சுற்றுச்சூழல் ஆணையர் ஜெனஸ் பொடோக்நிக் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.தைத்தொடர்ந்து செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது தொடர்பான விவாதம் மின்னணு தொழில்நுட்பத் துறையில் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது.

பொதுவான மதிப்பீட்டின்படி ஒரு கைப்பையில் இருக்கும் உபயோகப்படுத்தப்பட்ட செல்லிடபேசிகளில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்பதை பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

மின்னணு கழிவுகள் குறித்த ஐநா மன்றத்தின் அறிக்கை ஒன்றில் 41 செல்லிடபேசிகளில் ஒரு கிராம் தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் உமிகோர் என்கிற தொழில்நுட்ப நிறுவனம் வெறும் 35 செல்லிடபேசிகளில் இருந்தே கூட ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்று பிபிசியிடம் தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு டன் பயன்படுத்தப்பட்ட செல்லிட பேசிகளில் இருந்து 300 கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும்.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பேசிய ஜெனஸ் பொடோக்நிக், நிலத்தில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும்போது ஒரு டன் தங்கத்தாதில் இருந்து ஒரே ஒரு கிராம் தங்கம் தான் பிரித்தெடுக்கப்படுவதாக தெரிவித்தவர் ஆனால் 41 ஸ்மார்ட் போன்களில் இருந்து நாம் அதே ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்று வாதிட்டார்.

அதாவது தங்கச்சுரங்கங்களில் சுமார் ஆயிரம் கிலோ தாதில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பதைவிட, வெறும் 41 ஸ்மார்ட் போன்களில் இருந்து அதே அளவான ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பது எளிய செயல் என்பது அவரது வாதம்.
செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது லாபம் தருமா?இந்த கணக்கெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்து எடுக்க ஆகும் செலவை விட பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு அதிகம் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி செல்லிடபேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் செயல் வர்த்தக ரீதியில் லாபம் ஈட்டும் தொழிலாக மாற முடியும்.

அந்த கோணத்தில் பார்த்தால், நம்மிடம் இருக்கும் ஒரு செல்பேசியில் இருந்து கிடைக்கும் தங்கத்தின் மதிப்பு என்பது சராசரியாக இன்றைய நிலையில் வெறும் நூறு (இந்திய) ரூபாய்க்கும் குறைவாக இருக்கிறது. இந்த நூறு ருபாய்க்கும் குறைவான மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுக்க ஆகும் செலவோ அதைவிட அதிகமாக இருக்கும் என்கிறார்கள் மின்னணு தொழில்நுட்ப வல்லுநர்கள். எனவே பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது வர்த்தக ரீதியில் லாபம் தரக்கூடிய தொழில் அல்ல என்கிறார்கள் இவர்கள்.

ஆனால் வேறு சில மின்னணு தொழில்நுட்ப வல்லுநர்களோ, தங்கத்தை பிரித்தெடுக்க ஆகும் செலவை விட, பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு கூடுதலாக இருக்கும் என்றும், இது லாபகரமான முயற்சியாகவே இருக்கும் என்றும் வாதாடுகிறார்கள்.

இந்த வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறம் இருக்க, இன்னொரு கணக்கு இதில் இருக்கும் வேறொரு சிக்கலை விளக்குகிறது. இன்றைய நிலையில் நிலத்தில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் ஏழறை டன் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. இதே அளவு தங்கத்தை நாம் பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருந்து எடுக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கு சாராசரியாக சுமார் 30 கோடி செல்பேசிகளை நாம் மறு சுழற்சி செய்யவேண்டும். அப்படி செய்தோமானால், உலகத்தில் தற்போது இருக்கும் சுமார் எழுநூறு கோடி செல்பேசிகளும் 23 நாட்களில் மறுசுழற்சி செய்து முடிந்துவிடும் என்கிறார்கள் மின்னணு விஞ்ஞானிகள்.

இணையத்தின் வளர்ச்சிப் படிகள்

http://denaldrobert.blogspot.com/

நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்ட இணையத்தின் வயது 43.நாற்பது ஆண்டுகளுக்கு முன் இரண்டு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்யத் தொடங்கி, இன்று அபார வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து உலாவிகளின் செயல்பாடு நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது.

1969 :
செப்டம்பர் 2-ஆம் தேதி ,கலிபோர்னியா பல்கலைகழகத்தில்இரண்டு கணினிகள் சில தகவல்களை பரிமாறிகொண்டன.இது Arpanet ,ராணுவத்தின் சோதனை இணையமாகும்.

1972:
Ray Tomilinson மின்னஞ்சலை மற்ற கணினிகளுக்கு அனுப்பும்முறையை கண்டுபிடித்தார்.

1973 :
Arpanet மூலம் இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளில்வெற்றிகரமாகசெயல்படுத்தப்பட்டது.

1974 :
Viant Cerf and Bob kahn தகவல் தொடர்பில் ஒரு புரட்சியானTCP உருவாக்கினர்.இதன் மூலந்தான் உண்மையான இணையம்உருவானது.

1983 :
வலைத்தளங்களுக்கு Domain Name System கொண்டு வரப்பட்டது".com".அடுத்த வருடங்களில் ".gov" and ".edu" அறிமுகபடுத்தபட்டது.

1988 :
இணையத்தை தாக்கியது Internet Worm Morris ,ஆயிரக்கணக்கானகணினிகள் சேதமடைந்தன.

1990 :
Tim Berners-Lee World Wide Web (WWW) உருவாக்கினர்.

1994 :
Andreessen மற்றும் குழுவினர் உலகின் முதல் கமர்ஷியல்இணைய உலாவியான Netscape-ஐ உருவாக்கினர்.

1998 :
Larry Page and Sergey Brin கூகுளை உருவாக்கினர் Stanford பல்கலைகழகத்தில்.

1999 :
Napster ஒரு பெரும் புரட்சியை இசை கோப்புகளை பரிமாறுவதிலும்வாங்குவதிலும் ஏற்படுத்தியது.

2000 :
இணைய தளங்கள் அதிகமாக தொடங்கியது.

2004 :
Mark Zuckerberg Facebook-ஐ உருவாக்கினர் Harvard பல்கலைகழகத்தில்.

2005 :
வீடியோ படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் Youtube உருவானது .

2007 :
Apple Iphone-ஐ வெளியிட்டது ,இதன் மூலம் லட்சகனக்கனர்வர்கள்
இணையத்தை உபயோகப்படுத்த தொடங்கினர்.


உலகம் முழுவதும் இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை:

China - 29.8 கோடி (22.4%)
USA - 22.7 கோடி (74.7%)
Japan - 9.4 கோடி (73.8%)
India - 8.1 கோடி (7.1%)
Brazil - 6.8 கோடி (34.3%)
Germany - 5.5 கோடி (67%)
UK - 4.8 கோடி (72%)
France - 4.1 கோடி (66%)
Russia - 3.8 கோடி (27%)
S.Korea - 3.7 கோடி (76%)
Australia - 1.7 கோடி (80.6%)

திடீர் மரணத்தை தவிர்க்க "மூன்றரை நிமிடங்கள்"

http://denaldrobert.blogspot.com/

வீட்டை பரிசோதிக்கவோ அல்லது சிறுநீர் கழிக்கவோ, இரவில் எழுந்திருக்கும் ஒவ்வொரு நபரும் மூன்றரை நிமிடங்கள் கவனிக்க வேண்டும்.


காரணம்......?

நீங்கள் கழிப்பறைக்குச் செல்ல இரவில் எழுந்தவுடன், அது பெரும்பாலும் விரைவாக நடக்கும்.

நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது.

"மூன்றரை நிமிடங்கள்" ஏன் மிகவும் முக்கியம்?

நள்ளிரவில், சிறுநீர் கழிக்கும் ஆசை உங்களை எழுப்பும்போது, ​​ திடீரென்று எழுந்ததன் மூலம், மூளை இரத்த சோகையாக இருக்கும், மேலும் இது இரத்தம் இல்லாததால் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

மூன்று நிமிடங்கள் மற்றும் ஒன்றரை நிமிடங்கள் பயிற்சி செய்வது நல்லது,
அவை யாதெனில்?:

1. நீங்கள் எழுந்ததும், ஒன்றரை நிமிடம் படுக்கையில் இருங்கள்.

2. அடுத்த அரை நிமிடத்தில் படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்;

3. உங்கள் கால்களைக் குறைத்து, படுக்கையின் விளிம்பில் அரை நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்த சோகைக்கு ஆளாகாது, உங்கள் இதயம் பலவீனமடையாது, இது வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

இதை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் இது நிகழலாம்.

விமான இருக்கைகளின் நிறங்களில் இவ்வளவு விசயங்களா !!

http://denaldrobert.blogspot.com/

விமான பயணங்கள் ஒருவருக்கு மிகவும் அலாதியான உணர்வை தரக்கூடியவை. எனவே விமானங்களில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் அனைவருக்கும் நிச்சயமாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிட்டுகிறது. நீங்கள் விமானத்தில் பல முறை பயணம் செய்தவர் என்றால், ஒரு விஷயத்தை உங்களால் கவனித்திருக்க முடியும்.

பெரும்பாலான விமானங்களின் இருக்கை நீல நிறத்தில்தான் இருக்கும். உலகில் செயல்படும் ஏறக்குறைய அனைத்து விமான நிறுவனங்களும் நீல நிற இருக்கைகளைதான் பயணிகளுக்கு வழங்குகின்றன. அது ஏன் என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? இந்த சந்தேகம் இருக்கும்பட்சத்தில், உங்களுக்குதான் இந்த செய்தி.

பொதுவாக நீல நிறம் வானத்தை குறிக்கிறது என்பதால், விமான நிறுவனங்கள் ப்ளூ கலரை தேர்வு செய்யலாம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் இதன் பின்னணியில் பல்வேறு பகுத்தறிவான காரணங்களும் இருக்கின்றன.

பொதுவாக விமானங்களில் பயணம் செய்வது என்றாலே ஒரு சிலருக்கு இனம் புரியாத பயம் வந்து விடும். அதுவும் முதல் முறை பயணம் செய்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களின் பயத்தை போக்குவது சிரமமான காரியமாக இருக்கும். இதனை ஏரோபோபியா என குறிப்பிடுகின்றனர். ஏரோபோபியா என்றால், விமானத்தில் பறப்பதற்கு உண்டாகும் பயம் என அர்த்தமில்லை.

பொதுவாக பறப்பதற்கு உண்டாகும் பயம்தான் ஏரோபோபியா. அதாவது ஹெலிகாப்டர் மற்றும் மற்ற அனைத்து பறக்கும் வாகனங்களில் பயணம் செய்வதற்கு ஒருவருக்கு பயம் இருந்தால், அவர் ஏரோபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என அர்த்தம். அனைத்து பறக்கும் வாகனங்கள் என்பதால், இதில் விமானங்களும் அடங்குகின்றன.

விமானங்களில் பயணம் செய்பவர்களின் பயத்தை போக்குவதற்காகவும் நீல நிற இருக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது நீல நிறம் நமது மனதில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்குவதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விமானங்களில் பயணிக்கும்போது பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்ற உணர்வுகள் கண்டிப்பாக அனைவருக்கும் தேவை.

ஏரோபோபியாவை எதிர்த்து போரிட பயணிகளுக்கு இது உதவி செய்யும். எனவேதான் விமான நிறுவனங்கள் நீல நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால் இது ஒரு காரணம் மட்டும்தான். நீல நிற இருக்கைகளுக்கு பின்னால் இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விமான நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் நீல நிறத்தை பயன்படுத்துகின்றன.

வெள்ளை போன்ற நிறங்களுடன் ஒப்பிடும்போது, நீல நிற இருக்கைகளில் அழுக்கு மற்றும் உணவு கறைகள் அவ்வளவாக தெரியாது. எனவே அடிக்கடி சுத்தப்படுத்துவது மற்றும் அடிக்கடி மாற்றுவது போன்ற தேவைகள் இருக்காது என்பதால், ஓரளவிற்கு பணத்தை விமான நிறுவனங்களால் சேமிக்க முடியும். இதன் காரணமாகவும் நீல நிற இருக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதுதவிர விமானத்தில் பயணிகளுக்கு இடையே மோதல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்காகவும் நீல நிற இருக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. விமானங்களில் பயணிக்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் தொடர்ச்சியாக அடிக்கடி விமானங்களில் பயணம் செய்பவர்களின் அனுபவத்தை கேட்டு பாருங்கள்.

அவர்களுக்கு விமானத்தில் பயணித்து பயணித்து அலுப்பு தட்டியிருக்கும். அத்துடன் விமான பயணங்கள் ஒரு சிலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடியவை என்பதையும் மறுத்து விட முடியாது. ஒரு சில சமயங்களில் உங்களுக்கு விமானத்தில் மிகவும் மோசமான அனுபவங்கள் உண்டாகலாம். விமானங்களில் பயணம் செய்யும்போது பல்வேறு விதிமுறைகள் இருக்கும்.

அத்துடன் இருக்கைகளில் உங்களுக்கு போதிய அளவிற்கு இடவசதி கிடைக்காமல் போகலாம். யார் என்றே தெரியாத ஒருவரின் தோள் பட்டையை இடித்து கொண்டே நீங்கள் நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டியதாகவும் இருக்கலாம். எனவே இருக்கைகளின் நிறத்தின் உதவியுடன் முடிந்தவரை அனைத்து பயணிகளையும் அமைதியாக வைத்திருக்க விமான நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன.

அதற்கும், நீல நிறத்திற்கும் என்ன சம்பந்தம்? என நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மையில் சம்பந்தம் இருக்கவே செய்கிறது. இதற்கு அறிவியல் ரீதியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஒருவரை அமைதிப்படுத்தக்கூடிய ரசாயனங்களை நீல நிறம் உடலில் உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் விமானத்தில் பயணிகள் சண்டையிட்டு கொள்வதற்கான வாய்ப்புகள் குறையும்.

அத்துடன் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வும் தூண்டப்படும். ப்ளூ கலர் அமைதியை குறிக்கிறது என கலர் சைக்காலஜி வல்லுனர்கள் கூறுகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அனைத்து நேரங்களிலும் விமான நிறுவனங்கள் நீல நிறத்தைதான் தேர்வு செய்துள்ளனவா? என்றால், இல்லை என்பதுதான் பதில்.

கடந்த 1970 மற்றும் 1980களில் ஒரு சில விமான நிறுவனங்கள் சிகப்பு நிறத்தை தேர்வு செய்தன. ஆனால் நீல நிறத்திற்கு மாறும் சூழல் உடனடியாகவே அந்த விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. ஏனெனில் சிகப்பு நிறம் பயணிகளுக்கு இடையே ஆக்ரோஷத்தை தூண்டும் வகையில் இருந்தது. எனவேதான் தேவையில்லாத பிரச்னைகளை தவிர்ப்பதற்காக விமான நிறுவனங்கள் நீல நிறத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றன.

மாதக்கடைசி பணப்பற்றாக்குறையை எப்படி சமாளிக்கலாம்?

https://denaldrobert.blogspot.com/

ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் 20 தேதிக்குமேல் திண்டாட்டமாகவே இருக்கிறது நம்மில் பலருக்கு. ‘கையில வாங்கினேன். பையில போடல; காசு போன இடம் தெரியலை’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடலை பாட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை. எனவே, 21-ம் தேதிக்குப்பின் யாரிடம் கடன் கேட்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்.

நிதி ஆலோசகர் வி.சங்கர் அவர்கள் கூறும் ஆலோசனைகள்:

”நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.

1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம்.

சம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது. இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம். அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.

2. சம்பளம் வந்ததும் அத்தியாவசியமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும். வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது.

3. கட்டாயம் செய்யவேண்டிய செலவுகளுக்கான பணத்தை சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவைத்துவிட வேண்டும். இதுபோக, மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, அடிக்கடி ஹோட்டலுக்குப் போவது, ஷாப்பிங் செய்வது, சுற்றுலா போவது போன்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.

4. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி, ரிசர்வ் ஃபண்டாக வைத்துவிட வேண்டும். இதை எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வைத்துவிடலாம். இந்தப் பணத்தை மிக மிக அவசர தேவைகள் ஏற்பட்டாலொழிய, 20-ம் தேதிக்கு முன்பு தொடவே கூடாது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய வுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது ஆபத்பாந்தவனாக உதவும்.

ரிசர்வ் ஃபண்ட்தான் இருக்கிறதே என்று நினைத்து 20 தேதிக்குள் தாம்தூம் என்று செலவழிக்கக் கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், அதை அந்தக் கணக்கிலேயே அப்படியே வைத்துவிடலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் பணத்தை நீண்ட நாள் சேமிப்பாக மாற்றலாம்.

5. எப்போதுமே குறைந்த அளவில் கடனை வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்க உதவும் கடன்கள் தவிர்த்து, பிற கடன்கள் அனைத்துமே தேவை இல்லாத கடன்கள்தான். இதைத் தவிர்த்து, வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன் அனைத்துமே அதிகமான வட்டி விகிதத்தில்தான் கிடைக்கிறது. இந்தமாதிரியான கடன்களை வாங்கும்போது அதிகமான வட்டியைச் செலுத்தவேண்டியிருக்கும். இதனாலும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு மாத கடைசியில் பிரச்னை உண்டாகும்.

6. மளிகைப் பொருட்களை தினம் தினம் வாங்குவதால் நமக்கு நஷ்டம்தான். இதற்குப் பதில் மொத்தமாக வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 200 – 300 ரூபாய் வரை மிச்சமாகும். தவிர, மாத கடைசியில் கையில் பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

7. கையிலிருக்கும் பணத்தை வைத்துதான் செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, அடுத்த வாரம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் எனில், உடனே எங்கு ஷாப்பிங் போகலாம், என்ன பொருளை வாங்கலாம் எனத் திட்டமிடக்கூடாது. ஏனெனில், அந்தப் பணம் வராமல் போவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, கையில் உள்ளதைவைத்து திட்டமிட்டு சிறப்பாக வாழ்வதே புத்திசாலித்தனம்.

8. எல்லாவற்றுக்கும் மேலாக, சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும். இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். எனவே, சிக்கனத்துக்கான வழிவகைகளை அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது” என்றார் சங்கர்.

கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

மணி பேக் பாலிசி vs என்டோமென்ட் பாலிசி

https://denaldrobert.blogspot.com/

பாலிசி கால முதிர்வு அல்லது இறப்பின் போது பாலிசி முடிவுறும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களையும், என்டோமென்ட் மற்றும் மணி பேக் திட்டம் ஆகிய இரண்டுமே வைத்திருக்கின்றன. பாலிசிதாரர் உயிரோடு இருந்து பாலிசி காலம் முதிர்ச்சி அடைந்துவிட்டால், அவரே பாலிசி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு வேளை பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவருடைய நாமினி அந்த பணத்தைப் பெறுவார்.

யுஎல்ஐபியைப் போல் அல்லாமல் என்டோமென்ட் திட்டமும், மணி பேக் திட்டமும் சந்தையைச் சார்ந்து இருப்பதில்லை. அதனால் இந்த திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் முதலீடு செய்யப்படுகிறது. பாலிசி கால முதிர்வு அல்லது பாலிசிதாரர் இறப்பு ஆகிய இவற்றில் எது முதலில் வருகிறதோ அப்போது முதலீடு செய்த பணம் கைகளுக்கு வந்துவிடும். எனவே இந்த திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் திரும்ப கிடைக்கும் என்று உத்திரவாதம் வழங்கலாம்.

என்டோமென்ட் திட்டம் மற்றும் மணி பேக் திட்டம் ஆகிய இவற்றிற்கிடையே இருக்கும் மிக முக்கிய வேறுபாடு பணத்தைத் திருப்பி வழங்கும் காலமாகும். என்டோமென்ட் திட்டத்தில் பாலிசி காலம் முடிந்த பின்பு அல்லது பாலிசிதாரர் இறந்த பின்பு பணம் திருப்பித் தரப்படும். ஆனால் மணி பேக் திட்டத்தில் அவ்வாறு இல்லாமல் பாலிசியில் குறிப்பிட்டுள்ளவாறு பாலிசி காலம் முதிர்வு பெறும் வரை ஒரு சீரான இடைவெளியில் பணம் திருப்பிக் கொடுக்கப்படும். எடுத்துக்காட்டாக ஒரு பாலிசிதாரர், மணி பேக் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் அவர் 3 வருடங்கள் கழித்து 10 சதவீத பணத்தைத் திரும்பப் பெறுவார். 6 வருடங்கள் கழித்து 15 சதவீத பணத்தைப் பெறுவார். இவ்வாறு அவருக்கு சீரான இடைவெளியில் பணம் திருப்பி வழங்கப்படும்.

லோன் பெறுவதற்கு என்டோமென்ட் திட்டத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் மணி பேக் திட்டத்தை அதற்குப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் மணி பேக் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணம் ஒரு சீரான இடைவெளியில் குறைந்து கொண்டே இருக்கும்.

பணத்தை சேமிக்க மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு என்டோமென்ட் பாலிசி ஒரு மிகச் சிறந்த கருவியாக இருக்கும். அதாவது பணத்தை சேமிக்க கஷ்டப்படும் ஒருவர் ஒரு வங்கியில் கணக்கு துவங்கி, தனது கணக்கில் கணிசமான பண இருப்பை வைத்திருப்பது அவருக்கு இயலாத காரியமாகும். அப்படிப்பட்டவர் இந்த என்டோமென்ட் திட்டத்தில் முதலீடு செய்து சேமிப்பதன் மூலம் தனது வாழ்க்கையின் முக்கிய காலங்களான தனது மகன் அல்லது மகளின் திருமணம் மற்றும் தனது ஓய்வு காலம் ஆகிய காலங்களில் பணத்தட்டுப்பாடு இல்லாமல் சமாளிக்க முடியும். இந்த திட்டத்தில் அவர் மிக எளிதாக சேமிக்க முடியும்.

மணி பேக் திட்டம், ஒரு சீரான இடைவெளியில் பணம் வேண்டும் என்று விரும்புவோருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக ஒருவர் தனது குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி கட்டணம், உயர்கல்விக்கான தேர்வு கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த அவருக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் அவர் இந்த மணி பேக் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். நீண்ட காலம் கழித்து ஒரு பெரிய தொகையைப் பெற வேண்டும் என்றால் என்டோமென்ட் பாலிசியில் முதலீடு செய்யலாம்.

சீராக பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் மணி பேக் திட்டத்தில் சேரலாம். ஆனால் பாலிசியில் சேர்வதற்கு முன்பு அதைப் பற்றி நன்கு அறிந்து அவற்றின் நெறிமுறைகளைத் தெரிந்து மற்றும் ஒப்பிட்டுப் பார்த்த பின்பே சேர வேண்டும். அப்போது தான் நமக்குத் தேவையான லாபத்தைப் பெற முடியும்.

கடலை எண்ணெய்யின் நன்மைகள்

https://denaldrobert.blogspot.com/

1. (Omega-6 Essential Fatty Acid) - ரத்த உறைவைத் தடுக்கவும் ரத்த அழுத்த அளவை சீராக வைத்துக் கொள்ளவும், நோய் தடுக்கும் ஆற்றல் அதிகமாகவும் இவை துணை புரிகின்றன. இதயத்தைப் பாதுகாப்பதிலும் ஒமேகா கொழுப்பு அமிலங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

2.மியூஃபா கொழுப்பு-நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களின் அமைப்பைச் சிதைவுறாமல் நிலை நிறுத்துகிறது.

3.நமது ரத்தத்தில் உள்ள தீமை தரும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது.

4. 'பீட்டா சிட்டோஸ்டிரால்' எனும் துணை ரசாயன பொருள் கடலை எண்ணெயில் உள்ளது. இதுகொலஸ் டிராலை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்டது. எனவே இதனை தினமும் 0.8 கிராம் உடலில் சேர்த்து வந்தால்இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

5.'ரெசவராடால்' எனும் நோய் எதிர்ப்பு பொருள் கடலை எண்ணையில் காணப்படுகிறது. இது இதய வியாதிகள், புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது. நோய்த் தொற்றுகளை தடுப்பதிலும் மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கு வகிக்கிறது.

6.கடலை எண்ணெயில்'வைட்டமின்-இ'மிகுந்துள்ளது. 100 கிராம் எண்ணெயில் 15.69 மில்லிகிராம் ஆல்பா டோகோபெரல், 15.91 மில்லிகிராம் காமா டோகோபெரல் உள்ளது. வைட்டமின் இ, லிப்பிடுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும். செல் சவ்வுகள் வளர்ச்சி அடையவும்,ஆக்சிஜன்பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதிலும் இது பங்கெடுக்கிறது.

6.நீண்டகாலம் கெட்டுப் போகாத தன்மை கொண்டது என்பதால் பல நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம்.ஆனால் சிலருக்கு வாந்தி போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் பயன்படுத்தலாம்.

7.சாதாரணமாக நல்ல மஞ்சள் நிறம் கொண்ட இந்த எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டபின் இளமஞ்சள் நிறமாக காணப்படும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவதை தடுக்கும். மாசுப் பொருட்களும் நீக்கப்பட்டு இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை அனைவரும் பயன்படுத்தலாம்.

8.பித்தப் பை கல்லைக் கரைக்கும்-கடலை எண்ணெய் தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

9.வெப்பத்தை தடுக்க- கடலை எண்ணெய் "King of Oil" என்று அழைக்கப்படுகிறது. நம் சருமத்தால் சுலபமாக உள்ளிழுக்கப் படுவது. இந்த எண்ணை சமச்சீரான எண்ணெய் என்பதால் எல்லா தோஷங்களுக்கும் நல்லது என்கிறது ஆயுர்வேதம்.
நிலக்கடலைல் இயற்கையாகவே சூரிய வெப்பத்தை தடுக்கும் பொருட்களான SPF உள்ளது. அதனால் தோலில் ஏற்படும் சின்னச்சின்ன தடிப்புகள், கட்டிகள் இவற்றிற்கு மிகச் சிறந்த மருந்து. விட்டமின் E, தாதுப் பொருட்கள், புரதப் பொருட்கள், லேசிதின் நிறைந்துள்ள எண்ணெய் இது.

10. கடலை எண்ணெய் பிரசவித்த பெண்கள் மார்பில் கட்டிக் கொள்ள தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

வாழை இலையில் சாப்பிடுவதின் பயன்கள்


https://denaldrobert.blogspot.com/

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.
அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாடகை வீட்டின் முன்பணத்திற்கு சட்டத்தின் வரையறை


சொந்த வீடு வைத்திருப்பவர்களை விட வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தான் சென்னை போன்ற நகரங்களில் அதிகம். வாடைகை வீடு என்று வரும்போது வாடகையைத் தவிர்த்து முன்பணமாக (அட்வான்ஸ்) ஒரு பெரிய தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஏழை எளிய மக்களை பொறுத்தவரை முன்பணம் கொடுப்பது பெரும் சவாலகவே இருக்கும். 10 மாத வாடகை அல்லது 5 மாத வாடகை என்று வீட்டு உரிமையாளர்கள் கேட்பார்கள். ஆனால், ஒரு மாத வாடகைப் பணத்தை முன் பணமாகக் கொடுத்தால் போதும் என்று சமீபத்தில் சென்னை 13-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்த உத்தரவின் மூலம் கூதலாகக் கொடுத்த வாடகை முன்பணத்தைத் திரும்பப் பெற முடியுமா? வழக்கும் தீர்ப்பும் அண்மையில் சென்னை வீட்டு வாடகைதாரருக்கும் உரிமையாளருக்குமான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வாடகைதாரர்களின் வயிற்றில் பாலை வார்த்தது என்று சொல்லலாம்.

இரண்டு மாத வாடகையைக் கொடுக்காத வாடகைதாரர் வீட்டைக் காலி செய்ய உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், முன் பணமாக எவ்வளவு கொடுப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

1996-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த, வீட்டு வாடகை தொடர்பான வழக்கில், வீட்டு உரிமையாளருக்கு, வாடகைதாரர், ஒரு மாத வாடகையை முன்பணமாகக் கொடுத்தால் போதும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நிலுவையில் உள்ள வாடகைப் பணம், ஒரு மாத முன்பணம் ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டு மீதிப் பணத்தை வாடகைதாரருக்கு வீட்டு உரிமையாளர் கொடுத்துவிட வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு கூறுகிறது.

இந்த வழக்கை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது வீட்டில் குடியிருப்பவர்கள் ஒரு மாத வாடகையை முன் பணமாக வைத்துக்கொண்டு, எஞ்சிய தொகையைக் கேட்டால் உரிமையாளர்கள் கொடுப்பார்களா? ஒரு வேளை ஒரு மாதத்துக்கு மேல் கொடுக்கப்பட்ட வாடகைப் பணத்தை உரிமையாளர்கள் கொடுக்க மறுத்தால் எங்கு முறையிடுவது? வழக்கறிஞரின் விளக்கம் “வாடகை வீட்டுக்குச் செல்பவர்கள் ஒரு மாத வாடகையைக் கொடுத்தால் போதும் என்று சட்டம் சொல்கிறது. எனவே முன்பணமாக ஒரு மாத வாடகைப் பணத்துக்கு மேல் உரிமையாளர்கள் கேட்க முடியாது.

ஏற்கெனவே கூடுதலாக முன்பணம் கொடுத்திருந்தால் அதை உடனே கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு மாத வாடகைப் பணத்தை முன் பணமாக வைத்துகொள்ளச் சொல்லிவிட்டு மீதிப் பணத்தை கழிக்கச் சொல்லிவிடலாம். வீட்டைக் காலி செய்வதற்கு முன்பாக நீங்கள் திட்டமிட்டு வாடகைப் பணத்தைக் கழித்துவிடலாம்” என்கிறார் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் எஸ்.பி. விஸ்வநாதன்.

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி: அதிகாரங்கள்

http://denaldrobert.blogspot.com/


பிபின் ராவத் இந்தியாவின் முதல் முப்படைகளுக்கான தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். பாதுகாப்பு அமைச்சகத்தில் ஏற்கனவே இருக்கும் நான்கு துறையின் செயலாளர்களுடன் 5வது செயலாளராக உருவாக்கப்பட்ட பதவியே இந்த முப்படைகளின் தளபதி.

முப்படைத் தளபதி செய்யக்கூடியவை:

பாதுகாப்பு அமைச்சருக்கு முப்படைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் முதன்மை ஆலோகராக செயல்படுவார். பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் மற்றும் பாதுகாப்புத்துறை திட்டமிடல் குழு ஆகியவற்றில் பங்காற்றுவார்.

பாதுகாப்புத் அமைச்சகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராக, அதற்கு தலைமை வகிப்பார்.

பிற படைகளின் தளபதிகளுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகளே இவருக்கும் கொடுக்கப்படும். ஆனால் பிற தளபதிகள் 62 வயதில் அல்லது பதவியேற்றதிலிருந்து 3 ஆண்டுகள் நிறைவடைவது, ஆகியவற்றில் எதற்கான தேதி முதலில் வருகிறதோ அன்று ஓய்வு பெறுவார்கள். ஆனால் முப்படைத் தளபதி 65 வயதில் ஓய்வு பெறுவார்.

அனைத்து படைகளிலும் ஆள் சேர்ப்பது மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதை ஒருங்கிணைத்து, கட்டமைப்பை முழுமையாக பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவார்.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை பிரிவுகளை உருவாக்கி ராணுவக் கட்டளைகளை மறுசீரமைப்பார்.

முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருப்பதுடன், அந்தமான் நிகோபாரில் உள்ள முப்படைகளைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கிய படைப்பிரிவு, கேந்திர கட்டளைப்படைகள், புதிதாக உருவாகவுள்ள விண்வெளி, சைபர், சிறப்புப்படைப்பு ஆகியவற்றிற்கு நிரந்தர தலைவராக இருப்பார்.

அணு ஆயுத தளவாட ஆணையத்தின் (Nuclear Command Authority) ராணுவ ஆலோசகராக செயல்படுவார்.

ஐந்து ஆண்டுகளுக்கான பாதுகாப்பு முதலீடு கொள்முதல் திட்டத்தையும் இரண்டு ஆண்டுகாலத்தில் வருடாந்திர கொள்முதல் திட்டங்களையும் செயல்படுத்தும் பணிகளை ஒதுக்குவார்.

தேவையற்ற செலவினத்தை குறைத்து சீர்திருத்தம் செய்வதும் இவருடைய பொறுப்பாகும்.

பாதுகாப்பு சேவை தொடர்பான கண்ணோட்டத்தில் நாட்டின் அரசியல் தலைமைக்கு ஆலோசனை வழங்குவார்.

முப்படைத் தளபதி செய்ய முடியாதவை:

ஆயுத உற்பத்தி மற்றும் அது குறித்த ஆய்வு, முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் ஆகியவற்றுக்கு தனி செயலாளர்கள் உள்ளனர். இந்த செயலாளர்களைப் போல முப்படைத் தளபதி 5வது புதிய செயலாளர்.

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய ஒவ்வொரு படைக்கும் தனிப்பட்ட அளவில் இருக்கும் பிரச்சனைகளை அந்தந்த படைகளின் தளபதிகளே கவனித்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட படையின் உள்விவகாரத்தில் இவர் தலையிட முடியாது.

முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்தாலும், இவருக்கு கீழ் பணியாற்ற எந்தவொரு தனிப்பட்ட படைப்பிரிவும் கிடையாது.

தளபதிகளின் தலைவர் என குறிப்பிடப்பட்டாலும், அவர்களின் தலைவராக மாட்டார். அதனால் பிற தளபதிகளுக்கு உத்தரவு பிறபிக்க முடியாது.

முப்படைத் தளபதி கொள்முதல் திட்டத்தின் செயல்பாடு அவரிடம் இருந்தாலும் எந்த கொள்முதல் திட்டத்தையும் குறிப்பாக மூலதனக் கொள்முதல்களை நிறுத்த முடியாது.

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்


அடல் பென்ஷன் யோஜனா (APY) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) ஆகியவை இரண்டு திட்டங்களும் வருமான வரிச் சட்ட பிரிவு 80C கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பல்வேறு கூடுதல் நன்மைகளைத் தற்போது அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

என்பிஎஸ் திட்டம் அனைவருக்கும் பொருத்துமாறு இருக்கும்போது அடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒழுங்குபடுத்தப்படாத துறையினரை மட்டும் கவனம் செலுத்துகிறது. இந்த ஆண்டிற்கான வரி முதலீடுகளை இன்னும் நீங்கள் செய்யவில்லை என்றால் இந்த இரண்டு திட்டத்தின் கீழ் உங்கள் முதலீடுகளைச் செயல்படுத்தலாம். 1.5 லட்சத்திற்கு மேல் உள்ள தொகைக்குப் பல்வேறு கூடுதல் நன்மைகளை இந்தத் திட்டம் வழங்குகிறது. உங்களுக்கு NPS மற்றும் APY என்ற இரண்டு தேர்வுகள் உள்ளது. இவை இரண்டும் வெவ்வேறு அம்சங்களுடன் கூடிய அரசாங்கத்தின் ஓய்வூதிய திட்டங்களாகும்.

அடல் ஓய்வூதிய யோஜனா ஒழுங்கமைக்கப்படாத துறையில் கவனம் செலுத்தியுள்ள போதிலும், NPS அனைவருக்கும் பொருந்தும்படி உள்ளது. தவிர, நுழைவு வயது, பங்களிப்பு, வருமானம் மற்றும் வரி போன்றவற்றிலும் வேறுபாடு உள்ளது. நிதி திட்டமிடுபவர்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு பொருந்தக்கூடிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த முடிவை எடுக்க , ஓய்வூதிய திட்டங்கள் APY மற்றும் NPS இடையே அடிப்படை வேறுபாடுகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வயது அடல் ஓய்வூதியத் திட்டம் மற்றும் என்.பி.எஸ் ஆகிய இரண்டிற்கும் பதிவு செய்யக் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் அதிகப் பட்ச வயது வரம்பு வேறுபடுகிறது. NPS க்காக, அதிகபட்ச வயது 60 ஆண்டுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது, APY க்கு, இந்த வயது வரம்பு 40 ஆண்டுகள் ஆகும்.

முதலீட்டு வரம்பு NPS இல், முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை அளவுக்கு வரம்பு இல்லை.நிலையான ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு , முன் வரையறுக்கப்பட்ட மாதாந்திர பங்களிப்புகளில் APY செயல்படுகிறது. ஆனால் NPS முதலீட்டில், குறிப்பிட்ட பென்ஷன் இலக்கைப் பெறுவதற்குக் குறைந்த பட்ச மாதாந்திர பங்களிப்புத் தேவைப்படுகிறது. உதாரணமாக, 18 வயதில் ஆரம்பிக்கும் ஒருவர் மாதத்திற்கு 210 ரூபாய் செலுத்துவதால் 42 ஆண்டுகள் கழித்து அவருக்கு ரூபாய் 5000 ஓய்வூதியம் பெற முடியும்.

குறைந்தபட்ச முதலீடு/பங்களிப்பு ஒவ்வொரு குறைந்த பட்ச பங்களிப்பாக ரூபாய் 500/- மற்றும் ஒவ்வொரு ஆண்டின் குறைந்த பட்ச பங்களிப்புத் தொகையாக ரூபாய் 6000/- என்ற அளவை NPS வழங்குகிறது. சந்தாதார்கள் ஒவ்வொரு ஆண்டின் குறைந்த பட்ச தொகையை அந்த ஆண்டிற்குள் செலுத்த வேண்டும். APY மூன்று முறைகளில் பங்களிப்பை செலுத்த அனுமதிக்கிறது. காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர முறைகளில் பங்களிப்பு தொகையை இதில் செலுத்தலாம். ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் இரண்டு பங்களிப்புகள் நிச்சயம் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு 18 வயது APY சந்தாதாரர், மாதத்திற்கு ரூபாய் 42/- அல்லது அரையாண்டிற்கு ரூபாய் 248/- செலுத்துவதால் 60 வயதிற்குப் பின் மாதம் ரூபாய் 1000/- ஓய்வூதியமாகப் பெற முடியும்.

வருவாய் APY-ல் ரூபாய் 1000/- முதல் ரூபாய் 5000/- வரை முன் வரையறுக்கப்பட்ட தொகையை வருவாயாக வழங்குகிறது. இருப்பினும், NPS வருமானம் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது , சந்தை இயக்கம் மற்றும் நுழைவு நேரம் உட்படப் பல காரணிகளைப் பொறுத்து வருமானம் மாறுபடும்.

சந்தாதாரர் APY கணக்கு தொடங்க விண்ணப்பதாரர் ஒரு வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருத்தல் வேண்டும். NPS திட்டத்தில் NRI உட்பட இந்திய குடியுரிமை உள்ளவர்கள் அனைவரும் இணையலாம். இருப்பினும், NSDL மின்னாளுகை கட்டமைப்பின் வலைதளத்தின்படி OCI, PIO மற்றும் HUF போன்ற அட்டைதாரர்களுக்கு NPS கணக்கு தொடங்க தகுதி இல்லை.OCI என்பது, இந்தியக் குடியுரிமை இல்லாத இந்தியருக்கு வழங்கப்படும் வாழ்நாள் விசா நிலை. PCI என்பது இந்திய தோற்றுவாய்க் கொண்ட நபருக்கு வழங்கப்படும் ஒரு அடையாளம் ஆகும், HUF என்பது இந்து மதக் கூட்டுக்குடும்ப முறையாகும்.

நெகிழ்வுத்தன்மை APY விண்ணப்பதாரரின் வயதினை அடிப்படையாகக் கொண்ட முன் வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அட்டவணையில் வருகிறது மற்றும் தேர்ந்தெடுத்த அட்டவணையின் அடிப்படையில் ஒரு நிலையான ஓய்வூதிய தொகை கொடுக்கிறது. NPS, சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால் , விண்ணப்பதாரர் தனது விருப்பத்திற்கு ஏற்ப வெவ்வேறு சொத்து வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய விருப்பத்தை வழங்குகிறது. இந்தச் சொத்து வகுப்புகள் பங்கு, பெருநிறுவன கடன் மற்றும் அரசாங்க பத்திரங்கள் ஆகியவை அடங்கும். தங்கள் போர்ட்போலியோவை அட்ஜஸ்ட் செய்ய விரும்பாத சந்தாதாரர்களுக்காகத் தானியங்கி தேர்வு முறையும் NPS ல் உள்ளது.

கணக்கு வகை APY ஒரே வகையான வங்கி கணக்கை அளிக்கிறது. ஆனால் NPS இரண்டு வகையான வங்கி கணக்கை அளிக்கிறது. டயர் I மற்றும் டயர் II . டயர் I கணக்கு என்பது, சந்தாதாரர் 60 வயது முடியும் வரை அவர் கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது. டயர் II கணக்கு என்பது வாடிக்கையாளர் விரும்பும்போது எந்த ஒரு தடையும் இல்லாமல் பணத்தைத் திரும்பப் பெற முடியும். மேலும் டயர்II என்பது ஒரு கூடுதல் கணக்கு முறையாகும். டயர் I கணக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர் கூடுதலாக டயர் II வகைக் கணக்கையும் நிர்வகிக்க முடியும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை PFRDA இன் இணையத்தளம் - pfrda.org இன் படி., APY சந்தாதாரர்கள் "விதிவிலக்கான சூழ்நிலைகளில், 60 வயதிற்கு முன்னர் முன்கூட்டியே வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது இறப்பு / தீர்க்க முடியாத நோய் போன்ற காரணத்திற்காக மட்டும்.

ஒற்றுமை சந்தாதாரர் 60 வயதை அடைந்த பிறகு இரண்டு திட்டங்களிலும் ஓய்வூதியம் தொடங்குகிறது. NPS திட்டத்தின் அதே வரிச் சலுகைகளை APY திட்டத்திலும் அனுபவிக்கலாம். APY திட்டத்தின் கீழ் செலுத்திய பங்களிப்பு , 50,000/- ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80CCD பிரிவின் கீழ் வரி விலக்கும், 1.5 லட்சத்திற்கு மேல் வருமான வரி சட்டத்தின் கீழ் 80C பிரிவின் கீழ் வரி விலக்கும் கிடைக்கும். சந்தாதாரரின் இறப்பிற்குப் பின் அவருடைய துணைவருக்குப் பென்ஷன் வழங்கப்படும். மேலே கூறியவை அனைத்தும் NPS மற்றும் APY திட்டங்களுக்கான அடிப்படி விஷயங்களாகும்.


முதலிரவு முடிந்ததும் மனைவி கொலை



எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் தனது மனைவி ஏற்கனவே கற்பிழந்தவர் என்பதை முதலிரவில் தெரிந்து கொண்டதால் ஆத்திரத்தில் பால்கனியில் இருந்து மனைவியை கீழே தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் ஒரு திருமணம் நடந்தது. பலவிதமான ஆசைக்கனவுகளுடன் முதலிரவுக்கு சென்ற கணவர், முதலிரவுக்கு பின்னர் தனது மனைவி கன்னித்தன்மை ஏற்கனவே இழந்தவர் என்பதை தெரிந்து கொண்டதால் ஆத்திரமான அவர், தனது மனைவியை தூக்கி 4 வது மாடியின் பால்கனியில் இருந்து கீழே தூக்கி போட்டுள்ளார்.

நான்காவது மாடியில் இருந்து விழுந்த அந்த பெண், ரத்தவெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கெய்ரோ போலீசார் புதுமாப்பிள்ளையை கைது செய்தனர்.

கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறக்கவில்லை – புதிய பரபரப்பு தகவல்கள்!



எகிப்தின் ராணியாக இருந்த கிளியோபட்ரா பாம்பு கடித்துத்தான் இறந்தார் என்று கூறப்படும் கதையை மான்செஸ்டர் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மறுத்துள்ளனர்.

பழங்கள் இருந்த ஒரு கூடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நாகப் பாம்பு கடித்து அரசி இறப்பதற்கு எந்த அளவுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன என அந்தப் பல்கலைக்கழகத்தில் எகிப்து குறித்து ஆராயும் நிபுணர்களும் பாம்புகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் ஒன்றாக இணந்து ஆராய்ந்தனர். அரசியையும் அவரது இரண்டு தோழிகளையும் கொல்லக்கூடிய நாகத்தை அவ்வளவு சிறிய பெட்டிக்குள் மறைத்துக் கொண்டுவந்திருக்க முடியாது என அவர்கள் கருதுகின்றனர். தொடர்ச்சியாக மூன்று முறை நாகம் கடித்தது என்ற கதையின் நம்பகத்தன்மை குறித்தும் அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

எகிப்தின் அரசியாக இருந்த கிளியோபாட்ரா தன் 39வது வயதில் கி.மு. 30ல் இறந்துபோனார். அவர் அரசியாக இருந்தபது ரோம சாம்ராஜ்யத்துடன் தொடர்ந்து அவருக்கு மோதல்கள் இருந்துவந்தன. ரோம் நாட்டுக் குறிப்புகளில்கூட விஷம் நிறைந்த பாம்பினால் கடிக்கப்பட்டே கிளியோபாட்ரா மரணமடந்தார் என்று கூறப்படுகிறது. அல்லது தற்கொலை செய்துகொள்வதற்காக பாம்பை அவர் கடிக்க விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

3 பேரை அடுத்தடுத்து பாம்பு கொத்துமா?

கிளியோபாட்ராவை கொத்தியதாகக் கூறப்படும் நாகப் பாம்பு மிகப் பெரிய அளவில்தான் இருந்திருக்க முடியும். அதை இந்தக் கதைகளில் வருவதுபோல பழக்கூடைகளில் மறைத்து கொண்டுவர முடியாது என மான்செஸ்டர் அருங்காட்சியகத்தின் காப்பாளரான ஆண்ட்ரூ க்ரேயும் எகிப்திய நிபுணரான ஜாய்ஸ் டில்டெஸ்லியும் கூறுகின்றனர். இம்மாதிரியான பாம்புகள் 5-6 அடி நீளம் கொண்டவையாக இருக்கும். 8 அடி அளவுக்குக்கூட இவை வளரக்கூடியவை. அவ்வளவு பெரிய பாம்பு கூடையில் மறைந்திருக்க முடியாது என்கிறார்கள் இவர்கள். அப்படியே கூடையில் வைத்து அந்தப் பாம்பு கிளியோபாட்ராவை சென்றடைந்திருந்தாலும் முதலில் கிளியோபாட்ராவையும் அடுத்தடுத்து அவரது இரண்டு பணிப்பெண்களையும் கொத்தியிருப்பது இயலாத காரியம் என்கிறார்கள் இந்த நிபுணர்கள்.

“நாகப்பாம்புகள் மிகப் பெரியவை என்பதோடு, அவை கடித்தால் மரணம் எற்படுவது வெறும் பத்து சதவீதம்தான். பெரும்பாலான தாக்குதல்களில் விஷம் வெளிப்படுவதில்லை. அப்படியே கொன்றாலும்கூட மரணம் மெதுவாகத்தான் நிகழும்” என்கிறார் க்ரே. ஆனால், அடுத்தடுத்து இரண்டு மூன்று பேரைக் கொல்வது நடக்காத காரியம் என்கிறார் அவர்.

பாம்புகள் வேட்டையாடவும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவுமே விஷத்தைப் பயன்படுத்துகின்றன. ஆகவே அவை விஷத்தை சேமித்து வைத்துக்கொள்ளும் என்று சுட்டிக்காட்டுகிறார் க்ரே.

'ரிவர்ஸ் மார்ட்கேஜ்' வீட்டுக் கடன் திட்டம்‏



வளர்ந்த நாடுகளில் பல ஆண்டு காலமாக இருந்துவரும் இந்தத் திட்டம், கடந்த 2006-ம் ஆண்டு கடைசி வாக்கில் இந்தியாவில் அடியெடுத்து வைத்தது.

இதை வீட்டு வசதிக்கடன் வழங்கி வரும் ஒரு பிரபல நிறுவனம் முதன்முதலில் கொண்டு வந்தது. அதன்பிறகு முன்னணி தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் மளமளவென்று இத்திட்டத்தைக் கொண்டு வந்து விட்டன. 'ரிவர்ஸ் மார்ட்கேஜ்' பற்றிய விவரம் இது...

இக்கடன் திட்டத்தின்படி, மூத்த குடிமக்களுக்கு சுமார் 15, 20 வருடங்களுக்கு அவர்களின் வயது மற்றும் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப மாதந்தோறும் ஒரு தொகை வழங்கப்படும். 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ள ஒருவருக்கு வயது 65 என்றால் அவருக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்கு மாதா மாதம் சுமார் 8,500 ரூபாய் கிடைக்கும்.

வயது 70 என்றால் சுமார் 10 ஆயிரம் ரூபாய் தரப்படும். இந்தக் கடன்தொகை, அதற்கான வட்டி, வீட்டின் உரிமையாளர் மற்றும் மனைவியின் மறைவுக்குப்பிறகு வீட்டை விற்று, எடுத்துக் கொள்ளப்படும். வழக்கமான வீட்டுக் கடனின் தலைகீழ் திட்டம்தான் இது.

அதாவது, வீட்டுக் கடனில், அதனை வாங்கியவருக்கு வீடு மீதான உரிமை ஆரம்பத்தில் குறைவாக இருக்கும். கடனை கட்டக் கட்ட இந்த உரிமை அதிகரித்துக்கொண்டே வரும். ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டத்தில் இது தலைகீழாக இருக்கும். அதாவது, தொடக்கத்தில் அதிகமாக உரிமை இருக்கும்.

மாதத் தொகையை பெறும் காலம் அதிகரிக்க அதிகரிக்க, அந்த உரிமை குறைந்துகொண்டே வரும். அதிக மதிப்புமிக்க சொந்த வீடு உள்ள, அதேநேரத்தில் கையில் பணம் குறைவாக இருக்கும், நிலையான வருமானம் இல்லாத தம்பதிகளுக்கு ஏற்ற திட்டமாகும் இது.

குழந்தைகள் இல்லாதவர்களுக்கும், பிள்ளைகளால் கவனிப்பு இல்லாதவர்களுக்கும் இது கை கொடுக்கும்.

'ரிவர்ஸ் மார்ட்கேஜ்' கடன் பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள்:

1. வீட்டின் உரிமையாளரின் வயது அறுபதுக்கு மேல் இருக்கவேண்டும்.

2. வசிக்கும் வீட்டில் குறைந்தபட்சம் ஓராண்டாவது இருக்கவேண்டும்.

3. குறிப்பிடப்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மாதத் தொகை நிறுத்தப்படும். ஆனால், வீட்டின் உரிமையாளர் அவரின் கடைசிகாலம் வரை அந்த வீட்டில் வசிக்கலாம். கணவர் இறந்துவிட்டாலும் மனைவி அவரின் கடைசி காலம் வரை அந்த வீட்டிலேயே இருக்கலாம்.

அதேபோல், மனைவி இறந்துவிட்டாலும் கணவர் கடைசி வரைக்கும் அந்த வீட்டில் வசிக்கலாம். அதாவது தம்பதிகள் இருவரின் மறைவுக்குப் பிறகுதான் வீட்டை வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் எடுத்துக்கொள்ளும்.

4. சொத்தின் உரிமை தம்பதிகள் இருவருக்கும் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் கணவர் இறந்து விட்டால் அந்தத் தொகை மனைவிக்குக் கிடைக்கும்.

5. சொத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் தரப்படும். பணத்தை மாதா மாதம் வாங்கிக் கொள்ளலாம். அல்லது மொத்தமாக கூட வாங்கிக்கொள்ள முடியும்.

கவனிக்கவேண்டிய விஷயங்கள்:

1. வழங்கும் தொகைக்கு சுமாராக 12- 13 சதவீத வட்டி கணக்கிடப்படுகிறது. இது மூத்த குடிமக்களுக்கு அதிகம்.

2. பூர்வீக சொத்துக்குக் கடன் கிடையாது.

3. சர்வதேச அளவில் இதுபோன்று பெறப்படும் பணத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லை. இந்தியாவில் இது குறித்து இன்னமும் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கிறது.

மார்பக மெலித்தல் : அதிர்ச்சி தகவல்



மார்பக மெலித்தல் (ப்ரெஸ்ட் அயர்னிங்) மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் பின்பற்றப்பட்டு வருகிறது. கேமரூன், நைஜீரியா, கினியா ரிபப்ளிக் முதலான நாடுகளும் இதில் அடங்குமாம்.

சிறுவயது பெண்களின் மார்பகங்களில், சூடான இரும்பு அல்லது கற்களை வைத்து, அவர்களின் மார்பக திசுக்களை அழுத்தி விடுகின்றனர். இதனால், அவள் 2 நாட்களில் இருந்து சில வாரங்களுக்குள், தன் மார்பகங்களை இழந்து விடுகிறாள். இப்படி மார்பகங்களை தட்டையாக்குவதினால், பெண்கள் பார்ப்பதற்கு பெண்மை தோற்றம் குறைந்தும், ஆண்களுக்கு கவர்ச்சிகரமாகத் தோன்றாமலும், உடல் ரீதியான துன்புறுத்தல்களில் இருந்தும், பாலியல் பலாத்காரங்களில் இருந்தும் காக்கப்படுகிறனராம்.

பணக்கார வீட்டுப்பெண்கள் எலாஸ்டிக் பெல்ட்டுகளை பயன்படுத்துகின்றனர். பள்ளிக்கு செல்லும் மகள், 'அந்த பெல்ட்டை' அணிந்திருக்கிறாளா என தாய் சோதிப்பது, பெண் குலத்திற்கே ஏற்பட்டுள்ள துயரமான நிகழ்வு.



இதில் 58 சதவிகிதம் வழக்குகளில், தாய்மார்களேதான் தங்கள் மகளுக்கு இந்த துன்பத்தை இழைக்கிறார்கள். இப்படி அறியாமையால், நிலக்கரியில் காய்ச்சிய கற்கள் மற்றும் இரும்பு சுத்தியலைக் கொண்டு பெண்களை துன்புறுத்தும் காரியம், நமக்கு கேட்கும்பொழுதே நடுக்கத்தைத் தருகிறது.

'கலாச்சாரம்', 'பாரம்பரியம்' என்ற வழக்கமான காரணச் சொற்களை சொல்லி, அவர்களின் இச்செயலை நியாயப்படுத்திக் கொள்கிறனர். இந்த இரக்கமற்ற செயல்முறை பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. இப்படி செய்வதனால் புற்றுநோய், கடுமையான காய்ச்சல், அரிப்பு, திசுச் சிதைவு, மார்பகங்கள் மறைந்தே போவது போன்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் இப்பெண்கள்.

மார்பக மெலித்தல் செய்த பிறகும், பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களும் உண்டு. இதனால், குழந்தை பிறந்த பிறகு, பெண்களின் மார்பகங்கள் பால் சுரக்கும் தன்மையை இழந்து விட, ஒரு வித கடி எறும்பை கடிக்க விட்டு சுரக்க வைக்கின்றனர். ஒரு தவறை மறைக்க, இன்னொரு தவறு. அதுவும் மன்னிக்க முடியாத தவறு. தங்கள் அடையாளத்தையே இழந்து, ஆண்களைப் போல மாறி, உளவியல் ரீதியான மனநோயை சந்திக்கின்றனர்.

பல தலைமுறைகளுக்கு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த கொடூர செயல், இன்று அனைவரும் விவாதிக்கும் வண்ணம் உலகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. சமீபத்திய அறிக்கையின் படி, உலகில் 3.8 மில்லியன் பெண்கள், இந்த 'மார்பக மெலித்தல்' கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனராம். ஐக்கிய நாடுகளின் மக்கள் நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பாலியல் சார்ந்த குற்றம் சாற்றப்படாத குற்றங்களுள் இந்த 'மார்பக மெலித்தல' மிக முக்கியமான ஒன்று.

இந்த முட்டாள் தனத்தை எதிர்த்து போராடும் லண்டனைச் சேர்ந்த பெண்கள் முன்னேற்ற கழகத்தினர், "மார்பகங்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவை. அவற்றை மெலித்தல் பாவச் செயல். இது போன்ற தவறுகள் ஒழிய செக்ஸ் கல்வி கொண்டு வர வேண்டும். இயற்கையாக இருக்கும் பெண்ணின் உடலே அவளுக்கு பாதுகாப்பற்றது எனக் கருதுவது உச்சகட்ட மூடத்தனம்" என்று கூறுகின்றனர்.

ஃபேஸ்புக்கில் உள்ள ‘பாதுகாப்பு ஓட்டை’ (அதிர்ச்சி தகவல்)



பிரிட்டிஷ் மென்பொருள் பொறியாளரும், சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவருமான ரெசா மொயாண்டின் ஃபேஸ்புக்கில் பயனர்களின் தகவல்களின் பாதுகாப்பு குறித்து மேற்கொண்ட ஆய்வில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. "Who can find me?" என்னும் அம்சத்தில் "Everyone/public" என்னும் ஆப்ஷனை தேர்வு செய்யும் பயனர்களின் மொபைல் நம்பர் பிறருக்கு சுலபமாக தெரிந்துவிடும் அபாயம் உள்ளது என்பதை அவர் கண்டறிந்துள்ளார்.

மொயாண்டின் தனக்கு தெரிந்த எளிய வழிமுறை பயன்படுத்தி, சாத்தியமான ஆயிரக்கணக்காண பல தொலைப்பேசி எண்களை உருவாக்கியுள்ளார். அவற்றை ஃபேஸ்புக்கின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தில் (application programming interface) பதிவிட்ட போது, பலரின் பெயர்கள், அவர்களின் சுய விவரங்களுடன் தோன்றியுள்ளதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

பொதுவாக வங்கியில் அகவுண்ட் நம்பரை வைத்து வாடிக்கையாளரின் வீட்டு முகவரி உட்பட முழு தகவலை எடுப்பது போன்று, ஃபேஸ்புக் கணக்குடன் மொபைல் நம்பரை இணைப்பது, பயனர்களின் தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது என மொயாண்டின் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக்கு பிறகு ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தகவல்கள் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

திருடப்படும் தகவல்கள் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படலாம். தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தபடலாம். பிரபலங்களின் பெயர்களை பாழாக்க பயன்படுத்தபடலாம். மேலும் பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த ஆய்வையும், ஃபேஸ்புக் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டையும், ஃபேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது. பயனர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பில்லை. பயனர்களுக்கு பிரைவசி (Privacy) அம்சங்கள் பல உள்ளன. ஃபேஸ்புக்கில் ”பாதுகாப்பு ஓட்டை” உள்ளது என்னும் குற்றசாட்டை முற்றிலுமாக மறுக்கிறோம் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சிவன் பாம்பை ஆபரணமாக அணியும் ரகசியம்!


சிவன் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். இதற்கு விசேஷ காரணம் உள்ளது.

மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்கள் உள்ளன. இவை தீயவழிகளில் ஈடுபடும் போது, விஷம் கக்கும் நாகம் போல துன்பத்திற்கு மனிதன் ஆளாக நேரிடும்.

இவற்றை அடக்கி நல்வழியில் செலுத்தி விட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக மாறி விடும். இதை நமக்கு உணர்த்தவே நாதனாகிய சிவன் ஐந்துதலை நாகப்பாம்பைஆபரணமாக அணிந்துள்ளார்.

பாம்பின் ஐந்து தலையும் ஐம்புலனைக் குறிக்கும். இதை வெளிப்படுத்தும் விதமாக தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை லிங்கத்தின் மீது ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தை தரிசித்தால் தீய ஆசைகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"